தம்பி மனைவியை கேவலமாய் மிரட்டிய அண்ணன்!
சென்னை:தம்பி மீது போடப்பட்ட விவகாரத்து வழக்கை வாபஸ் பெற வேண்டும். ரூ. 10 லட்சம் தர வேண்டும்.இல்லாவிட்டால், நீயும், நானும் நெருக்கமாக இருப்பது போன்ற படத்தை இன்டர்நெட்டில் போடுவேன்,போஸ்டர் அடித்து ஒட்டுவேன் என மிரட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் தேவி (26). அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை 2 ஆண்டுகளுக்குமுன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தார் வரதட்சணைகேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து கணவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் தேவி. மேலும் விவகாரத்து கோரிவழக்கும் தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுமாறு பாஸ்கர் குடும்பத்தினர் வற்புறுத்தினர்.ஆனால் மறுத்து விட்டார் தேவி.
பாஸ்கருக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகேந்திரனின் குடும்பமும் தேவியை மிரட்டியுள்ளது. சிலநாட்களுக்கு முன் செல்போன் மூலம் தேவியை தொடர்பு கொண்டு பேசிய மகேந்திரன்,
வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று விடு. ரூ. 10 லட்சம் பணமும் கொடு. இல்லாவிட்டால், நீயும் நானும்சேர்ந்திருப்பதை போல படம் எடுத்து வைத்துள்ளேன்.
அதை இன்டர்நெட்டில் போட்டு விடுவேன். போஸ்டர் அடித்து உன் தெருவில் ஒட்டுவேன். இதனால் உன்குடும்ப கெளரவம் காற்றில் பறக்கும் என மிரட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து தேவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார், அதில் என் கணவர் வரதட்சனை கேட்டு மிகவும் துன்புறுத்தியதால், தாய் வீட்டிற்கு வந்துவிட்டேன். விவாகரத்து கேட்டுவழக்கு தொடர்ந்துள்ளேன். இதனால் கணவர் குடும்பத்தினர் என்னை மிரட்டினர்.
கணவ>ன் அண்ணன் மகேந்திரன், நான் கணவருடன் இருக்கும் படத்தில், கணவருக்கு பதில் தன் படத்தைகிராபிக்ஸ் மூலம் இணைத்து, படமாக வைத்துள்ளார்.
இதன் மூலம் நான் அவருடன் நெருக்கமாக இருந்து புகைப்படம் எடுத்துகொண்டதாகவும், என்னைதவறானவள் என சித்தரித்தும் என்னை கேவலப்படுத்த முயல்கிறார்.
வழக்கை வாபஸ் வாங்குவதோடு, ரூ. 10 லட்சம் தரவேண்டும், இல்லாவிட்டால் இன்டர்நெட்டில் அந்தப்போட்டு விடுவதாக மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மகேந்திரனைத் தேடி வருகின்றனர். அவர் எஸ்கேப்ஆகியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications