22 ஆண்டு விசாரணை-1 வார தண்டனை
சென்னை:சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1 வாரம் தண்டனை அளித்து தீர்ப்புஅளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முரளி. மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலையில்ஈடுபட்டிருந்தார்.
கடந்த 1985ம் ஆண்டு போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அவர் தயாரித்து விநியோகித்தார். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.சென்னை எழும்பூர் கூடுல் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 22 வாரங்களாக வழக்கு நடந்ததுகுறிப்பிடத்தக்கது.
2 நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கில் நீதிபதி ஜெகன்னாதன் தீர்ப்பு அளித்தார். குற்றவாளி முரளிக்கு ஒரு வார சிறை தண்டனை மற்றும் ரூ. 2ஆயிரத்து 500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
22 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த வழக்கில் ஒரே ஒரு வாரம் மட்டும் குற்றவாளிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிசிறையிலிருந்த காலத்தை தண்டனைக் காலத்திலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி கூறியதால் முரளி விடுவிக்கப்பட்டார்.
முரளி தனது முகவரியை மாற்றிக் கொடுத்திருந்ததால் அவரைக் கண்டுபிடிக்கவே சில ஆண்டுகள் ஆனதாம். இதனால்தான் இந்த வழக்கு இத்தனைகாலம் நீடித்து விட்டதாக போலீஸ் தரப்பில்கூறப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications