அதிபர் தேர்தலில் அமெரிக்க கருப்பர் போட்டி
வாஷிங்டன்:கருப்பர் இனத்தைச் சேர்ந்தவரும், ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினருமான பாரக் ஓபமா அதிபர் தேர்தலில் குதித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹில்லாரி அறிவித்துபிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
அவரே வேட்பாளராகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கருப்பர் இனத்தைச்சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினரான பாரக் ஓபமாவும் இப்போது அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள ஸ்பிரிங்க்பீல்டில் நடந்த நிகழ்ச்சியில் ஒபாமா தனது முடிவை அறிவித்தார். பத்து ஆண்டுகளுக்குமுன்புதான் அரசியலுக்கே வந்தார் ஒபாமா.
பெரும் திரளாக கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் ஒபாமா பேசுகையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் பாவதற்கான அறிவிப்பைஉங்கள் முன் நான் வெளியிடுகிறேன்.
ஈராக் போர் ஒரு மாபெரும் தவறு. பல விலை மதிப்பற்ற அமெரிக்க உயிர்களை நாம் இழந்து விட்டோம். தொடர்ந்து உயிரிழப்பை நாம்அனுமதிக்க முடியாது.
எனவேதான் நான் அதிபரானால், அடுத்த ஆண்டு மார்ச் மாத்திற்குள் ஈராக்கில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களையும் திரும்ப அழைக்க நான்நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஒபாமா.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமா செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு இல்லினாய்ஸ் சட்டசபையில் அவர் எட்டுஆண்டுகள் உறுப்பினராக இருந்தார்.
ஹில்லாரி, ஒபாமா தவிர ஜான் எட்வர்ஸும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications