ஜெயலலிதாவின் அலர்ஜி: ஸ்டாலின் தாக்கு
சென்னை:ஆசை வெட்கம் அறியாது என்பார்கள். ஜெயலலிதா தனது பதவி ஆசை காரணமாக எதை வேண்டுமானாலும் எழுதும் அளவுக்குப் போய்விட்டார்என உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா வழக்கம்போல் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காதுஎன்பார்கள். அதைப் போல அம்மையாரால் அறிக்கை எழுத முடியாவிட்டாலும் அவருக்கு ஒரு அலர்ஜி.
அதை போக்கிக் கொள்ள எதையாவது அவர் அறிக்கை என்ற பெயரில் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிட வேண்டும். இன்று அவருக்கு எதுவும்கிடைக்கவில்லை.
உதவி இயக்குனர் அளவிலான ஒரு அதிகாரி தர்மபுரி மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சியை வைத்து, அவரது இறப்புக்குக்காரணம், 15ம் தேதி எனது தர்மபுரி மாவட்ட வருகை குறித்து மாவட்ட ஆட்சியர் 10ம் தேதி ஒரு கூட்டம் நடத்தியதாகவும்,
அதில் அதிகாரிகள் தான் செலவுகளை செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதனால் தான் அந்த அதிகாரி கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டதாகவும் தன் கற்பனைக் கதைகளையெல்லாம் பட்டியல் இட்டிருக்கிறார் ஜெயலலிதா.
ஆனால், 10ம் தேதி என் தலைமையில் எந்த கூட்டமும் நடக்கவில்லை என தர்ம்புரி கலெக்டர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதே போல யாரும்செலவை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதன்மூலம் ஜெயலலிதாவின் அறிக்கையில் உள்ள அசட்டுத்தனமான உள்நோக்கம் புரிகிறது.
மறைந்த அதிகாரி தனது அலுவலக பணிகள் குறித்தும், தன் உடல் நிலை குறித்தும், தூக்கம் இல்லாமல் மத மாதமாக விழித்திருப்பது குறித்தும்,சரியாக சாப்பிடக் கூட இயலாதது குறித்தும் பல தகவல்களை இறப்பதற்கு முன் கடிதமாக எழுதி வைத்திருக்கிறார்.
அதில் எந்த இடத்திலும் எனது தர்மபுரி பயணம் குறித்தோ, அல்லது கலெக்டர் கூட்டம் கூட்டியதாகவே, செலவை ஏற்கச் சொன்னதாகவோகுறிப்பிடவே இல்லை.
ஆனால், ஜெயலலிதாவாக பொய்யாக சில தகவல்களை கடிதத்தில் உள்ளதாகச் சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது பொய்அறிக்கைகளுக்கு ஆதாரப்பூர்வமாக பதில்கள் தரப்பட்டு அவரது முகத்திரை கிழிக்கப்பட்டாலும் கூட அவர் கொஞ்சம் கூட அதற்காகவெட்கப்படுவதாகத் தெரியவில்லை.
ஆசை வெட்கம் அறியாது என்பார்கள். ஜெயலலிதாவின் பதவி ஆசை எல்லோருக்கும் தெரிந்ததே. இதனால் எதை வேண்டுமானாலும் எழுதும்அளவுக்குப் போய்விட்டார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் எப்படியெல்லாம் ஊரையே பச்சை வர்ணம் அடித்து மாற்றுவதற்காக அதிகாரிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள் என்பதைஊர், உலகம் அறியும்.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு விவசாயி எனது சாவுக்கு ஜெயலலிதாவும் தமிழக அரசுமே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்தபோது,அதை அவரது உறவினர்கள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியத்திடம் கொடுத்துவிட்டதை அறிந்து, நள்ளிரவில் போலீசை விட்டு சிவபுண்ணியம்வீட்டில் புகுந்து கடிதத்தை கைப்பற்ற ஜெயலலிதா முயன்றது எல்லாம் பழைய ஏடுகளை புரட்டினால் தெரியும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications