எஸ்.எம்.எஸ். அனுப்பி என்ஜீனியர் தற்கொலை!
திருவள்ளூர்:காதல் திருமணம் செய்து கொண்ட என்ஜீனியர், வாழ்க்கையில் வெறுப்படைந்ததால், தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 35 வயதாகும் அவர் என்ஜீனியர் ஆவார். இவரும், சென்னை திருநின்றவூரைச்சேர்ந்த ஜெயந்தி என்பவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சரவணக்குமார் என்ற 9 வயதுமகன் உள்ளான்.
கல்யாணத்திற்குப் பிறகு செந்தில்குமார் அம்பத்தூரில் வேலைக்கு சேர்ந்தார். விருகம்பாக்கத்தில் குடியிருந்தார். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட செந்தில்குமாருக்கும், ஜெயந்திக்கும் நாளடைவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அடிக்கடி சண்டைகள் நடந்தது.
கடந்த 7ம் தேதியும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜெயந்தி தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார். மனம் உடைந்தசெந்தில்குமார் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வண்டி போன போக்கில் சுற்றித் திரிந்துள்ளார்.
அவர் வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்த ஜெயந்தியும், செந்தில்குமாரின் அண்ணனும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு எங்கேஇருக்கிறார் என்று கேட்டபோது ஒவ்வொரு ஊராக கூறியுள்ளார்.
கடைசியாக பெரம்பூரில் இருப்பதாக கூறியுள்ளார். 10ம் தேதி இரவு கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்செட்டி கிராமத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்துதனது நண்பர் மேனனுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் எனது காதல் வாழ்க்கை நரகமாகி விட்டது. இனி நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனது வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கிறேன்என்று அதில் இருந்தது.
இதைப் பார்த்த மேனன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக செந்தில்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம்செந்தில்குமார், பூச்சி மருந்தை குடித்து விட்டேன். சாவு வரும் வரை காத்திருக்கப் போவதில்லை. அதனால் தூக்குக் கயிறையும் தயாராகவைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து எங்கே இருக்கிறாய் என்று கேட்ட மேனன் முகவரியை வாங்கிக் கொண்டு ஜெயந்திக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார்.பின்னர் செந்தில்குமார் சொல்லிய இடத்திற்கு அனைவரும் விரைந்தனர்.
அவர்கள் வந்து பார்த்தபோது சொன்னபடியே செந்தில்குமார் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கிக் கிடந்தார். அருகேமோட்டார் சைக்கிள், பூச்சி மருந்து பாட்டில் இருந்தன.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications