மயிலாடுதுறை ரயில் பெங்களூரில் சிறைபிடிப்பு:விமான நிலையமும் முற்றுகை-பிளைட்கள் ரத்து
பெங்களூரூ:மயிலாடுதுறையில் இருந்து மைசூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னட அமைப்பினர் பெங்களூரூ மெஜஸ்டிக் ரயில் நிலையில் சிறை பிடித்தனர்.
இன்று காலை 5 மணியளவில் வந்த அந்த ரயிலை கன்னட ரத்ன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்கள் சிறை பிடித்தனர். தண்டவாளத்தில் கும்பலாகஅமர்ந்தோடு, பலர் ரயில் என்ஜினிலும் ஏறினர்.
என்ஜினை ஆப் செய்யுமாறு கூறிய அவர்கள் தமிழகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பும் பீதியும்ஏற்பட்டது.
ரயிலில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களிடையே அச்சம் பரவியது.
அவர்களை ரயில்வே போலீசார் கைது செய்ய முயன்ற போது, சிலர் ரயில் மீது ஏறி மின்சார கம்பியில் கை வைத்து தற்கொலை செய்யப் போவதாகமிரட்டினர். இதையடுத்து போலீசார் அவர்களை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நெடு நேரத்துக்குப் பின் கன்னட அமைப்பினர் 40 பேரை போலீசார் கைது செய்து ரயிலை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர்.
அதே போல யஷ்வந்த்பூர், சென்னபட்டணா, பெல்லாரியின் ஹோஸ்பேட் ஆகிய ரயில் நிலையங்களிலும் ரயில்களை மறித்து போராட்டங்கள்நடந்தன.
பார்க்கிங் பைக்குகள் எரிப்பு:
மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு இன்று ஒரு கும்பல் தீ வைத்தது. அதில் ஏகப்பட்டபைக்குகள் எரிந்து சாம்பலாயின. தமிழகத்துக்கு ரயில் ஏறிய பலரும் இங்கே பைக்குகளை விட்டுவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் முற்றுகை:
அதே போல பெங்களூரு விமான நிலையமும் போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பவில்லை. விமான நிலையத்துக்குள் அதிகாலையில் புகுந்தகன்னட அமைப்பினரை மத்திய பாதுகாப்புப் படையினர் விரட்டிப் பிடித்தனர்.
அவர்களை பின்னர் மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விமான நிலையத்தில் இருந்து கார்கள், டாக்சிகளை இயங்க விடாமல் அவ்வப்போது போராட்டம் நடப்பதால் உலகின் பல பகுதிகளில் இருந்தும்பெங்களூரு வந்திறங்கியவர்கள் நகருக்குள் போக முடியாமல் அங்கேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இதனால் விமான நிலையம் சந்தைக் கடை போல காணப்படுகிறது.
இந் நிலையில் பெங்களூருக்கு வர இருந்த 9 விமானங்களை பல்வேறு நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டன.
பஸ்சுக்கு தீ வைப்பு:
பெங்களூரு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் இன்று காலை முதல் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில்மூடப்பட்டிருந்த கடைகள் மீது கல்வீச்சும் நடந்தது. மைசூரில் ஒரு பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications