தமிழகத்தில் ஹெல்மட் கட்டாயமாகிறது!
சென்னை:தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மட் அணிவதை உறுதிப்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் தென்னிந்திய ஆட்டோமொபைல் சங்கம் சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் முகோபாத்யாயா மற்றும் சுதாகர் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில்,
இந்திய மோட்டார் வாகன சட்டப் பி>வு 129வது பி>வின்படி, இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும்என்பதை அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமை.
பல மாநிலங்களில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தமிழகத்திலும் இதைகட்டாயப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்பதைஅமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் 2 மாதங்களில் இது அமல்படுத்தப்படும் என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், 2 மாதங்களில் கட்டாயமாக்குவோம் என்பது நீண்ட காலம் போலத் தெரிகிறது. மேலும், ஹெல்மட்அணியாவிட்டால் அவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் தெளிவாக சொல்லப்படவில்லை.
எனவே அதுகுறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஹெல்மட் அணிவதை இன்னும் 3 வாரத்துக்குள் கட்டாயமாக்கி உத்தரவிட வேண்டும் என்றுஉத்தரவிட்டனர். பின்னர் விசாரணை 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications