சென்னை மாநகராட்சி பிரசாரம் நாளை ஓய்கிறது
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
100 வார்டுகளுக்கான மறு தேர்தலில் 33 வார்டுகளில் கவுன்சிலர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து 67 வார்டுகளுக்கான தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வந்தது. இந்தப் பிரசாரம் நாளைமாலை 5 மணியுடன் முடிகிறது.
17ம் தேதி ஓய்வு நாளாகும். 18ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவுநடைபெறுகிறது. இதற்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்படவுள்ளது.
கள்ள ஓட்டுக்களைத் தடுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பவேண்டிய வாக்குப் பெட்டிகள், அடையாள மை உள்ளிட்ட 69 பொருட்களும், வாக்குப் பதிவுக்கு முந்தையதினம் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு விடும்.
தேர்தலுக்காக மொத்தம் 1,534 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 16 லட்சம் பேர் வாக்களிக்கஉள்ளனர்.
4 நாள் மப்புக்கு கட்!:
மாநகராட்சி மறு தேர்தலையொட்டி சென்னை நகரில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை முதல் 16ம் தேதி மாலை 5 மணி முதல் 20ம் தேதி மாலை 5 மணி வரை நான்கு நாட்களுக்கு (வாக்குகள் எண்ணி முடிக்கும் வரை), சென்னை மாநகரம், சென்னை மாநகராட்சி மற்றும்மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மதுக் கடைகள், பார்கள் மூடப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைய உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications