பஸ்: விசாரித்த போலீஸ் டீமூக்கு பதவி உயர்வு!
சேலம்:தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் விசாரணையை நடத்திய மற்றும் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்களைத் திரட்டிய சிபிசிஐடி போலீஸ் டீமுக்குமுதல்வரின் பதக்கமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்று தெரிகிறது.
இதற்கான பரிந்துரையை சிபிசிஐடி டிஐஜியான ராஜேந்திரன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ளார்.
டிஎஸ்பிக்கள் பி.கே.பெரியசாமி, ஏ.பெரியசாமி, கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராஜபாண்டி, தம்பிதுரை, மாதையன், போபாலன்,
போலீஸ்காரர்களான முத்துவேல், ரமேஷ்குமார், குமாரவேலன், சர்புதீன், ராஜன், குணசேகரன் ஆகியோரது பெயர்கள் பதவி உயர்வுக்காகவும்பதக்கத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் போலீஸ்ாகரர்களுக்கு எஸ்.ஐ. பதவி தருமாறு ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.
இந்த வழக்கில் அதிமுக ஆட்சியின்போது சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அமுக்கவும் பலத்த நெருக்குதல் தரப்பட்டது. இதனால் வழக்குவிசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
ஆனால், அதையும் மீறித் தான் இந்த அதிகாரிகளும் போலீசாரும் வழக்கை சாட்சியங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு முதன்முறையாக சிபிசிஐடி விசாரித்தபோது அதன் எஸ்.பியாக இருந்தவர் சமுத்திரப்பாண்டியன். இவர் இவர் லஞ்ச ஒழிப்புப்பிரிவில் உள்ளார்.
தீர்ப்பை அறிய சமுத்திரப்பாண்டியனும் சேலம் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். தீர்ப்புக்குப் பின் அவர் கருத்து தெரிவிக்கையில், இது சிபிசிஐடிபோலீஸுக்குக் கிடைத்த வெற்றி.
இந்த வழக்கில் பத்திரிக்கையாளர்களின் சாட்சியம், அவர்கள் கொடுத்த ஆதாரங்களும் பெரும் உதவியாக இருந்தன. 5 ஆண்டுகள் ஆன பிறகும்கூட மாணவிகள், நேரில் வந்து சாட்சி கூறியது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications