கோவை பல்கலையில் மாணவர்கள் அஞ்சலி
கோவை:தர்மபுரி பஸ் எரிப்பில் பலியான கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று பேரும் ஒரே நாளில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்சேர்ந்தவர்கள்.
அதே போல மூவரும தங்கி இருந்ததும் ஒரே அறையில் தான். பஸ் எரிக்கப்பட்டபோது மூவரும் சேர்ந்தே பலியாகியுள்ளனர். மூவருக்கும் வயதும்19.
ஒரே அறையில் தங்கி, ஒரே வகுப்பில் படித்த மூன்று மொட்டுக்களை 10 நிமிடத்தில் எரித்து கரியாக்கிவிட்டது கொலைகார கும்பல்.
பல்கலை மாணவர்கள் அஞ்சலி:இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மகிழ்ச்சியும் சோகமும் ஒரு சேர படித்தது. தீர்ப்பு வந்ததுமகிழ்ச்சி தான் என்றாலும் அந்த கொடூர சம்பவத்தின் நினைவுகள் பல்கலைக்கழகத்தை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
கொல்லப்பட்ட 3 மாணவிகளுக்கும் அவர்கள் தங்கிப் படித்த விடுதி அருகே நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானவுடன்ஏராளமான மாணவ, மாணவிகள் அங்கு கண்ணீருடன் கூடினர். மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
பின்னர், இந்த நீதியை காயத்ரி, ஹேமலதா, கோகிலவாணி ஆகிய எந்தப் பாவமும் அறியாத மாணவிகளுக்கு சமர்பிக்கிறோம். இது போன்றசெயல்கள் இனி நடக்கவே கூடாது என பிரார்த்திப்போம். வன்முறை இல்லாத அரசியல் பாதை உருவாக பாடுபடுவோம் என்றஉறுதிமொழியையும் ஏற்றனர்.
இந் நிகழ்ச்சியின்போது மாணவ, மாணவிகள் கண்ணீரும் உணர்ச்சிப் பிழம்புமாக காணப்பட்டர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications