சென்னையில் சிக்கிய தாவூத் கூட்டாளி
சென்னை:பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான முகம்மது இக்பால் மேமன் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் இன்று மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி இக்பால் மேமன்.இவரை பல வருடங்களாக மும்பை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மேமன், ஹாங்காங்கிலிருந்து இலங்கை வழியாக சென்னை வருவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்ததகவல் கிடைத்ததும் போலீஸார் விமான நிலையத்தை முற்றுகையிட்டு மேமனைப் பிடித்தனர்.
இக்பால் மேமன் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது பல்வேறு கடத்தல் வழக்குகள் உள்ளன. கடந்தஐந்து ஆண்டுகளாக இவரை மும்பை போலீஸாரும், சுங்கத் துறையினரும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் பிடிபட்டார் மேமன். அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்பிடிபட்ட விவரம் ஏற்கனவே மும்பை போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர்கள் இன்று காலை சென்னை வந்தனர். நீதிமன்றத்தில் மேமனை தங்களது பொறுப்பில் எடுத்துச் செல்லஅனுமதி பெற்ற பின்னர் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்குக் கொண்டு சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications