நெல்லையிலும் கோட்டம் வேண்டும்: ராமதாஸ்
சென்னை:பாலக்காடு கோட்டத்திலிருந்து தமிழகப் பகுதிகளைப் பிரித்தது போல திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வரும் நெல்லை மற்றும் கன்னியாகுமரிப்பகுதிகளைப் பிரித்து புதிதாக நெல்லையில் ஒரு ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை. கடந்தஆண்டிலேயே இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இப்போது செயல்படத் தொடங்கியிருக்கிறது.
ஆனால் கேரள அரசு தேவையில்லாமல் புதிய சிக்கலை உருவாக்கி வருகிறது. தமிழகத்தோடு எந்த பிரச்சினையிலும், எந்த வகையிலும்உடன்பாட்டோடு செயல்படுவதில்லை என்று கேரள அரசு கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படுவது போலத் தெரிகிறது.
கேரளாவிலிருந்து போன எம்.பிக்கள் குழுவிடம், சேலம் கோட்டம் தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களுடன் பேச்சு நடத்தப்படும் என மத்தியரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாக கேரள அமைச்சர் விஜயக்குமார் கூறியுள்ளார். இது உண்மையாக இருந்தால் லாலுவின் பேச்சுகடும் கண்டனத்துக்குரியதாகும்.
சேலம் கோட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை என்பதையே தமிழக மக்கள் இனி ஏற்க மாட்டார்கள்.
தேவகவுடா பிரதமராக இருந்தபோது தென்னக ரயில்வேயைப் பிரித்து புதிதாக தென் மேற்கு ரயில்வே என்ற புதிய பிரிவை ஏற்படுத்தினார்கள்.அப்போது எந்த தென் மாநில முதல்வருடனும் அவர்கள் ஆலோசிக்கவில்லை, அழைத்துப் பேசவும் இல்லை.
அதேபோல சேலம் கோட்டம் தொடர்பாகவும் எந்தப் பேச்சுவார்த்தையும் தேவையில்லை. இது முடிந்து போன விவகாரம்.
பாலக்காடு கோட்டத்துடன் இணைந்துள்ள கேரள பகுதிகளை சேலம் ரயில்வே கோட்டத்தில் இணைக்கவில்லை. முற்றிலும் தமிழகப் பகுதிகள்மட்டுமே சேலம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இதை ஆட்சேபிக்க கேரளாவுக்கு எந்த உரிமையும் இல்லை.
பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால் பேச்சே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
சேலத்தோடு நில்லாமல், தற்போது திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைந்துள்ள கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட பகுதிகளை பிரித்துநெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை அப்பகுதி மக்கள்வைத்துள்ளனர்.
இது மிகச் சரியான, நியாயமான கோரிக்கை. இதுகுறித்தும் ரயில்வே அமைச்சரிடம் முதல்வர் கருணாநிதி உரிய நேரத்தில் பேச வேண்டும் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications