வெளியுறவு இணை அமைச்சராகிறார் சசி தரூர்?
டெல்லி:ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற சசி தரூர், மத்திய வெளியுறவு இணை அமைச்சராகநியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சசி தரூர் ஐ.நா. துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டார்.ஆனால் முதல் சுற்றிலேயே தோற்றுவிட்டார். இதனால் கடைசி சுற்றில் இருந்து விலகிக் கொண்டார்.
புதிய பொதுச் செயலாளராக பான் கி மூன் பதவியேற்ற பின்னர் சமீபத்தில் தனது ஐ.நா. பதவியை விட்டுவிலகினார் தரூர். இந்த நிலையில் தரூர், விரைவில் மத்திய வெளியுறவு இணை அமைச்சராக பொறுப்பேற்பார்என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட மலையாளியான சசி தரூருக்கு அமைச்சர் பதவியை வாங்கித் தர கேரளசேர்ந்த லாபி தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இதில் முக்கியமானவர்கள் பிரதமரின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் நாராயணன், வெளியுறவுச் செயலாளர்சிவசங்கர மேனன், ராஜிவ் குடும்பத்திற்கு நெருக்கமான ஜார்க் ஆகியோர். இவர்கள் அனைவருமே கேரளத்தைசேர்ந்தவர்கள்.
மிகுந்த திறமைசாலியான சசி தரூரை வெளியுறவுத்துறையில் பயன்படுத்திக் கொள்ள பிரதமர் மன்மோகன்சிங்கும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. சர்வதேச அளவில் நல்ல தொடர்புகளையும், அனுபவத்தையும்கொண்டுள்ளவர் தரூர்.
தற்போது வெளியுறவு இணை அமைச்சராக உள்ள அனந்த் சர்மாவுக்குப் பதில் தரூர் அப்பொறுப்பில்நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஐ.நா. சபையில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் இருந்த அனுபவம் உடையவர் தரூர்என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விவகாரங்களில் கில்லாடி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications