ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து வழக்கு-ஜெ
குழந்தைகளின் எலும்புக் குவியல்: ம.பி. திக் திக்!போபால்:மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் என்ற நகரில் மருத்துவமனை வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட பெரியவர்கள், குழந்தைகளின் எலும்புக் கூடுகள்,உடல் பாகங்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
உ.பி. மாநிலம் நித்தாரி கிராமத்தில் மொஹீந்தர் சிங் என்பவரின் பங்களாவில் குவியல் குவியலாக சிறார்களின் எலும்புக் கூடுகள்கண்டுபிடிக்கப்பட்ட பரபரப்பே இன்னும் அடங்கவில்லை.
இந்த நிலையில் மத்தியப் பிரதசே மாநிலம் ரட்லம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்தில் ஒரே குழியில் 300க்கும்மேற்பட்டோரின் உடல் உறுப்புகள், குழந்தைகளின் எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடத்தை போலீஸார் தற்போது சீல் வைத்து எலும்புக் கூடுகளை மீட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மொத்தம் 390எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளன.
இயற்கையாக இறந்தவர்களின் உடல்களா அல்லது கருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தைகளின் உடல்களா என்பது குறித்து போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications