மருமகனை குத்திக் கொன்ற மாமனார்
சிவகங்கை:மனைவியை அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டுக்குப் போன போலீஸ் ஏட்டை, அவரது மாமனாரும், மைத்துனரும் சேர்ந்து ஈட்டியால்குத்திக் கொன்றனர்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் தங்க கிருஷ்ணன் (34). ஆயுதப் படை காவலராக மதுரையில்வேலை பார்த்து வந்தார்.
தெற்குவாசல் காவல் நிலையத்தில் பைக் ரைடராக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவருக்கும், சிவகங்கைஅருகே உள்ள குமரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சுமதி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது 6 மாத கர்ப்பிணியாக பஞ்சுமதி உள்ளார். போலீஸ் குடியிருப்பில் தங்ககிருஷ்ணன், பஞ்சுமதி தம்பதியினர் குடியிருக்கின்றனர். சமீபத்தில்பஞ்சுமதிக்கும், தங்ககிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கல்யாணத்தின்போது பஞ்சுமதிக்குப் போட்ட நகைகளை தங்ககிருஷ்ணன் விற்று செலவிட்டு விட்டாராம். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுகோபத்தில் தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார் பஞ்சுமதி.
இதையடுத்து லாலா பாண்டி என்ற தனது நண்பருடன் குமரப்பட்டிக்குச் சென்றார் தங்க கிருஷ்ணன். மாமனார் கருப்பையாவிடம் சென்றுமனைவியை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் சண்டையைப் பார்த்த ஊர் மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து விட்டனர். போலீஸார் விரைந்து வந்தபோது, கருப்பையாவின்வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோ காரில் தங்க கிருஷ்ணன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
என்ன ஏது என்று போலீஸார் கருப்பையாவிடம் விசாரித்தபோது பைக்கில் மகளுடன் சென்றபோது விழுந்து விட்டதாக கருப்பையா கூறினார்.இதையடுத்து போலீஸார் தங்ககிருஷ்ணனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் தங்க கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய டாக்டர்கள், அவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும் போலீஸாரிடம்தெரிவித்தனர்.
அதிர்ந்த போலீஸார் லாலா பாண்டியிடம் விசாரித்தபோது வாக்குவாதத்தில் கருப்பையாவும், அவரது மகனும் சேர்ந்து தங்ககிருஷ்ணனைகுத்தீட்டியால் குத்திக் கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து கருப்பையா, அவரது மகன் போஸ், போஸின் மனைவி பாப்பா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications