வகுப்பறையில் மாணவி தீக்குளித்துத் தற்கொலை
மதுரை:மதுரையில் பிளஸ் ஒன் படித்து வந்த மாணவி, வகுப்பறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை செல்லூர் கீழத்தோப்பு, முதலியார் 4வது தெருவைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் திவ்யா. புட்டுத்தோப்பில் உள்ள தனியார் பெண்கள்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.
நேற்று நடந்த ரிவிஷன் பரீட்ச்சைக்காக காலையில் பள்ளிக்குச் சென்றார். தேர்வு எழுதி முடித்த அவர் பிற்பகல் 2.30 மணியளவில் தனது புத்தகப்பையிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்தார். ஆனால் அதில் தண்ணீருக்குப் பதில் மண்ணெண்ணையை கொண்டு வந்துள்ளார்.
அப்போது வகுப்பிலிருந்து மாணவிகள் அனைவரும் வெளியேறியிருந்தனர். மண்ணெண்ணையை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்ட திவ்யா,தீக்குச்சியால் தன் மீது நெருப்பை வைத்துக் கொண்டார்.
அடுத்த விநாடியே உடல் முழுவதும் பற்றி எரிய வகுப்பறைக்குள் அங்கும் இங்கும் அலறியபடி தீயில் கருகிய நிலையில் ஓடினார். தீயின் கோரம்தாங்க முடியாமல் வகுப்பறையிலிருந்து வெளியே ஓடி வந்த திவ்யாவின் கோலத்தைப் பார்த்து மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சியில்உறைந்து போயினர்.
சிலர் சுதாரித்துக் கொண்டு பள்ளி விடுதியிலிருந்து போர்வை, சாக்கு போன்றவற்றை எடுத்து வந்து திவ்யாவின் உடலைச் சுற்றி நெருப்பைஅணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் திவ்யா முழுவதுமாக எரிந்து பரிதாபமாக இறந்து போனார்.
தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை ஆணையர் சிதம்பரச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது,.
திவ்யா இருந்த வகுப்பறையை சோதனையிட்ட போலீஸார் திவ்யா அமர்ந்திருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தைக் கண்டுபிடித்தனர்.அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது என் சுய நினைவோடு என் மனதார எடுத்த முடிவாகும். இப்படிக்கு இன்று உயிரை விடும்திவ்யா என்று எழுதப்பட்டிருந்தது. வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் திவ்யா அதில் எழுதியிருந்தார்.
முன்பு கீழவாசல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10வது வகுப்பு படித்துள்ளார் திவ்யா. 11ம் வகுப்புக்காகத்தான் இந்தப் பள்ளியில் சேர்ந்தார்.படிப்பில் சுமாரான பெண்தான். முன்பு அவனியாபுரத்தில் வசித்து வந்த இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு செல்லூருக்கு மாறி வந்துள்ளனர்.
தந்தை லாரி டிரைவர், மாதத்தில் பாதி நாட்கள்தான் வீட்டில் இருப்பார். வீட்டுக்கு வரும்போதெல்லாம் மகளின் படிப்பு குறித்து விசாரிப்பாராம்.தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், தந்தை திட்டுவாரோ என்ற பயத்தில் திவ்யா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது காதல்விவகாரம் காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.
திவ்யா நெருப்பில் தீக்குளித்தபடி கருகி பிணமான சம்பவத்தை நேரில் பார்த்த பல மாணவிகள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.வகுப்பறையில் மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் மதுரையில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications