மறு தேர்தலில் 30% ஓட்டுக்களே பதிவு; 2 சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சிக்கு நேற்று நடந்த மறு தேர்தலின்போது வன்முறை நடந்த 2 வாக்குச் சாவடிகளில் இன்று மீண்டும் வாக்குப் பதிவுநடைபெறுகிறது. நேற்று நடந்த தேர்தலில் 30 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.

சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு நேற்று மறு தேர்தல் நடந்தது. வாக்காளர்களின் ஆதரவு இல்லாமல் படு மந்தமாக நடந்த இந்தத்தேர்தலில் 30 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

வாக்குச் சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 416 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேமுதிகசார்பில் 62, திமுக 36, பாஜக 34, காங்கிரஸ் 19, பாமக 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் 2 வேட்பாளர்கள்களத்தில் உள்ளனர். இவர்கள் தவிர 245 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.

15 லட்சத்து 94 ஆயிரத்து 653 வாக்காளர்கள் வாக்களிக்க, 1534 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் 12 ஆயிரம்போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பெண்கள் கூட்டத்தையே எந்த வாக்குச் சாவடியிலும் காண முடியவில்லை. மிக மிக சொற்பமான அளவிலேயே பெண்கள் வாக்களிக்கவந்திருந்தனர்.

வாக்குச் சாவடிகளுக்கு முன்பு சொற்ப வாக்காளர்களே காணப்பட்டனர். வாக்குச் சாவடிகளில் திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின்ஏஜென்டுகள் மட்டுமே இருந்தனர்.

முக்கியக் கட்சிகளான அதிமுக, மதிமுக ஆகியவை புறக்கணித்து விட்டதால் மயான அமைதியுடன் தேர்தல் நடந்தது. பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் கிடந்தன.

முக்கியக் கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்திருந்த நிலையிலும் கூட நேற்றைய மறு வாக்குப் பதிவின்போதும் பல இடங்களில் அடிதடி, கள்ள ஓட்டுஉள்ளிட்ட அமர்க்களங்கள் நடந்தேறின.

தேர்தலுக்குப் பின்னர் செய்தியாளர்களை தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 67 வார்டுகளுக்கும்அமைதியாக தேர்தல் நடந்தது. போதிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது, மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம்கூறியிருந்தும் கூட 30 சதவீத வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.

கள்ள ஓட்டு தொடர்பாக 38 புகார்கள் வந்துள்ளன. ஆனால் விசாரணையில் இவற்றில் பெரும்பாலானவை பொய்யானவை என்று தெரியவந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 10 மையங்களில் ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றார் அவர்.

கடந்த அக்டோபரில் நடந்த மாநகராட்சி தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்துசந்திரசேகரனிடம் கேட்டபோது, இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே நேற்று நடந்த மறு வாக்குப் பதிவின்போது ரகளை நடந்த 2 வாக்குச் சாவடிகளில் இன்று மீண்டும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மண்ணடி 27வது வார்டுக்குட்படட் அப்துல் ஹக்கீம் இந்து, முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில், திடீரென புகுந்த ஒரு நபர் வாக்குச்சீட்டுக்களைக் கிழித்துப் போட்டு விட்டு ஓடினார்.

இதுதொடர்பாக தேர்தல் அலுவலர் அசாருதீன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சாவடியில், இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதேபோல அபிராமபுரம் 142வது வார்டில், 2223வது வாக்குச் சாவடியில் புகுந்த ஒரு கும்பல் வாக்குச் சீட்டுக்களை அள்ளிக் கொண்டு ஓடியது.எனவே இங்கும் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இரு வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+