முலாயமுக்கு ஜெ ஆதரவு-காங்கிரசுக்கு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:உத்தரப் பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் துடிப்பதுகண்டனத்துக்குரியது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டசபையில் பிப்ரவரி 26ம் தேதி தனது அரசின் பெரும்பான்மையாக நிரூபிக்கத் தயாராக உள்ளதாக முலாயம் சிங் கூறியுள்ளார். அரசியல்சாசனத்திற்கு உட்பட்ட, ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்ட சரியான வழி இதுதான்.

ஆனால் காங்கிரஸ் கட்சி உ.பி. அரசை டிஸ்மிஸ் செய்து, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஏவுவதைசெய்யம் நபராக உ.பி. மாநில ஆளுநர் திகழ்கிறார். அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

அரசியல் முறைகேட்டிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் கை தேர்ந்தது காங்கிரஸ் என்பது உ.பி. விவகாரதில் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதா, இல்லையா என்பதை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும். ஆளுநர் மாளிகை அதை முடிவு செய்யமுடியாது.

முலாயம் சிங் யாதவ், தனது அரசின் பெரும்பான்மை பலத்தை பிப்ரவரி 26ம் தேதி சட்டசபையில் நிரூபிக்கும் வரை மத்திய அரசு காத்திருக்கவேண்டும்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அனைத்துக் கட்சிகளும், முலாயம் சிங் யாதவ் தலைமையிலான உ.பி. அரசை கலைத்து, ஜனநாயகப்படுகொலைக்கு ஆயத்தமாகி வரும் காங்கிரஸ் கட்சியின், மத்திய அரசின் போக்கைக் கடுமையாக கண்டிக்க முன்வர வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+