இந்தியா-பாக் ரயிலில் பயங்கர குண்டு வெடிப்பு:66 பேர் பலி-நூற்றுக்கணக்கானோர் காயம்
பானிபட்:இந்தியா-பாகிஸ்தான் இடையில் இயக்கப்படும் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று பயங்கர குண்டு வெடித்து தீப் பிடித்துக் கொண்டதில் 66பயணிகள் பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.
டெல்லியிலிருந்து பாகிஸ்தான் எல்லை நகரமான அட்டாரிக்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயில், கடந்த 2004ம் ஆண்டு முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
![]() |
நேற்று இரவு 10.40 மணிக்கு சம்ஜுதா எக்ஸ்பிரஸ் லாகூருக்குக் கிளம்பியது. 610 பயணிகள் அதில் இருந்தனர். பெரும்பாலானவர்கள்பாகிஸ்தானியர்கள் ஆவர்.
நள்ளிரவுக்கு மேல் 1.50 மணியளவில் ஹரியானா மாநிலம் பானிப்பட் அருகே ரயில் போய்க் கொண்டிருந்தபோது ரயிலின் கடைசிப் பெட்டியில்பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் கடைசி 2 பெட்டிகளில் பலத்த சேதமடைந்தன, தீப்பிடித்து எரிந்தன.
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறி அடித்தபடி உயிரைக் காக்க கீழே குதித்தனர். தீயணைப்புப் படையினருக்குத் தகவல்தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.
நெடு நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் பெட்டிகள் முழுவதும் எரிந்திருந்தன. சிலர் மட்டுமே உயிர் பிழைத்தனர். 66பயணிகள் கரிக்கட்டையாக எரிந்து போயிருந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டினர்தான்.
காயமடைந்த பயணிகள் பானிப்பட் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சூட்கேஸ்களில் திரவ வெடிபொருளைக் கொண்டு வந்து அதன் மூலம் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நடத்தியிருப்பது முதல் கட்ட ஆய்வில்தெரிய வந்துள்ளது. 3 சூட்கேஸ்களில் இவற்றைக் கொண்டு வந்துள்ளனர். அவற்றில் இரண்டு சூட்கேஸ்கள் ரயிலுக்குள் இருந்தது. ஒரு சூட்கேஸ்தீவானா ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பானிப்பட்மாவட்டம் சீலிடப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இணை அமைச்சர் வேலு, உள்துறைச்செயலாளர் துகல், தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர் தத் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பானிப்பட்டில் நிறுத்தப்பட்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3 மணிக்கு கிளம்பிச் சென்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications