உ.பி: காங்.கின் சூப்பர் திட்டம்-ஜெ புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காகவே, உ.பி. மாநில சட்டசபையைக் கலைத்து விட்டு அதை முடக்கிவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உத்தரப் பிரதேசத்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முலாயம் சிங் அரசை கலைத்து விட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்த மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயல்கிறது.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக் காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. அதனால் தங்களுக்கு வேண்டிய, தங்களுக்கு ஏற்ற வகையில்செயல்படக் கூடிய ஒருவரை புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா முற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக இதர அரசியல் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தினால், காங்கிரஸ்வேட்பாளர் கடும் போட்டியை சந்திக்க நேரிடும். இதை கருத்தில் கொண்டே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைக்க காங்கிரஸ்முற்பட்டுள்ளது.

எனவே, புதிய ஜனாதிபதி தேர்தலில் உத்தரப் பிரதேச மாநில எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அம் மாநில சட்டசபை கலைக்கப்பட்டு, முலாயம் சிங் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் நாட்டில்மிகப் பெரிய மாநிலமான உ.பி. அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தலில் பங்கேற்க முடியாமல் போய்விடும்.

அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவடையும் வரை உ.பியில் ஆறு மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சி நடக்க வேண்டும் எனகாங்கிரஸ் சதி செய்கிறது.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஓட்டு பலத்தை கணிசமாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ், சார்பில் ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் உ.பியில் மீண்டும் ஆறு மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சியே நீட்டிக்கப்படலாம்.காங்கிரஸ் கட்சியின் இந்த சதி வேலைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் சதிக்கு எளிதில்ஆட்பட்டுவிடக்கூடாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

(ஓ.. காங்கிரஸ் இவ்வளவு பெரிய பிளான் போடுதா?... பாம்பின் கால் பாம்பறியும்)

எம்பிக்களுடன் ஜெ சந்திப்பு:

நெடு நாட்களுக்குப் பின் தனது கட்சியின் எம்பிக்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்களே இல்லை. மாநிலங்களவையில் தான் 12 எம்பிக்கள் உள்ளனர்.

இந் நிலையில் விரைவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு எம்.பிக்கள் நாராயணன், ஜோதி, மலைச்சாமி,தினகரன், கோகுல இந்திரா, எஸ்.எஸ்.சந்திரன், சையது கான், காமராஜ்,

பெருமாள், தங்க தமிழ்ச்செல்வன், அன்பழகன், கோவிந்தராஜர் ஆகியோர் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் பட்ஜெட்கூட்டத் தொடரில் நடந்து கொள்வது எப்படி என்பது குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+