யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர் சுட்டுக் கொலை
யாழ்ப்பாணம்:யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழ் மாணவரை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை ராணுவம்தான் சுட்டுக் கொன்றதாக புகார் கூறப்படுகிறது.
ண்யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் கிருஷ்ணர் கமலதாஸ். 24 வயதாகும் இவர் படிப்போடு,மாணவர்களுக்கு பாடமும் நடத்தி வந்தார்.
நேற்று வாரணி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டுப் பிணமாக கிடந்தார்கிருஷ்ணர். அவரை ராணுவம்தான் சுட்டுக் கொன்றுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
சமீப காலமாக தமிழ் இளைஞர்கள், மாணவர்களை விசாரணை என்ற பெயரில் ராணுவம் அழைத்துச் சென்றுவருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் திரும்பி வருவதில்லை. பலர் கொல்லப்பட்டு விட்டனர் என புலிகள்குற்றம் சாட்டி வருகின்றனர்.
கிருஷ்ணர் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்முழுவதும் காயங்கள் காணப்படுகின்றன.
விமானப் படைத் தாக்குதலில் 2 தமிழர்கள் பலி:
இதற்கிசையே தமிழர்கள் மீது தொடர்ந்து ராணுவமும், விமானப்படையும் தாக்குதல் நடத்தி வருகின்றன. தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் விமானப்படைவிமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இன்று காலை 7.30 மணிக்கு புலியங்குளம் அருகே உள்ள பரசங்குளம் என்ற கிராமம் மீது விமானப்படையின் கிபிர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசித் தாக்கின.இதில் 2 தமிழர்கள் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.
நெடுங்கேரணியில் கண்ணிவெடி தாக்குதல்:
இதற்கிடையே, நெடுங்கேரணி பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு கண்ணிவெடித் தாக்குதல் நடந்தது. முதல் தாக்குதல் காலை 7.15 மணிக்கு நடந்தது. இதில்நெடுங்கேரணி மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் சேதமடைந்தது.
அடுத்த தாக்குதல் 8.20 மணிக்கு நடந்தது. இதில் பேருந்து ஒன்று சிக்கி சேதமடைந்தது. இரு தாக்குதல்களிலும் உயிர்ப் பலி ஏதும் இல்லை.
கரை ஒதுங்கிய தமிழ் மீனவரின் சடலம்:
இதற்கிடையே, காணாமல் போன தமிழ் மீனவர் சிவநாதன் சுரேஷ் என்பவ>ன் உடல் முல்லைத் தீவில் கரை ஒதுங்கியுள்ளது.
சுரேஷும், கருணாகரன் ஜெகதீஸ்வரன் என்ற மீனவரும் கடந்த 15ம் தேதி புதுக்குடியிருப்பு, மத்தளம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது காணாமல்போனார்கள். இவர்களை கடற்படையினர் தாக்கிக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந் நிலையில் சுரேஷின் உடல் மட்டும் கரை ஒதுங்கியுள்ளது.இன்னொருவரின் கதி என்ன என்று தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications