இலங்கைக்கு ஆயுதக் கடத்தல்: 8 பேர் கைது2000 கிலோ வெடிபொருள் பறிமுதல்!
மதுரை:மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2,000 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள், அலுமினியக்குண்டுகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரையில் 4 பேரும், தூத்துக்குடியில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில், கோடியக்கரை அருகே 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படையினர் கைது செய்து அவர்களிடமிருந்துபயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந் நிலையில் இன்று காலை கியூ பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் இலங்கைக்கு வெடிபொருட்கள், டீசல், காஸ் சிலிண்டர்உள்ளிட்டவற்றை கடத்த முயன்றதாக மதுரை மற்றும் தூத்துக்குடியில் 8 பேரை கைது செய்துள்ளனர்.
மதுரையில் இன்று காலை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் அனுப்பானடியைச் சேர்ந்த குணசேகர பாண்டியன், செல்வராஜ் ஆகியோர்சிக்கினர். அவர்களிடமிருந்து 2000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு அனுப்ப அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதேபோல மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த கார்மேகம் மற்றும் அவரது உதவியாளரையும் போலீஸார் கைது செய்தனர். கார்மேகம்அலுமினிய நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு கண்ணிவெடிகளைத் தயாரிக்க பயன்படும் அலுனியக் குண்டுகளைத் தயாரித்து இலங்கைக்குஅனுப்ப கார்மேகம் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸார், கார்மேகத்தின் அலுமினிய தொழிற்சாலைக்கும் சீல் வைத்தனர்.
இதே போல தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியில் நடந்த வேட்டையில் ஸ்டீபன், அப்துல் ரஸாக், பீட்டர், அன்புமணி ஆகியோர் சிக்கினர்.இவர்களிடமிருந்து 300 லிட்டர் டீசல், 10 செல்போன்கள், 3 படகுகள், காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கோடியக்கரை சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்ப முயன்றதாக 8 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications