மறுதேர்தல்-திமுக கூட்டணி வெற்றி-சென்னைமாநகராட்சியில் முதன்முதலாய் நுழையும் தேமுதிக
சென்னை:சென்னை மாநகராட்சிக்கு நடந்த மறு தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். இரு இடங்களில் தேமுதிகவும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், பாஜக ஆகியவை ஒரு இடத்திலும் வென்றுள்ளன. இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் தேமுதிக முதன்முதலாக காலடி எடுத்துவைக்கிறது.
சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு 18ம் தேதி மறு தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 10மையங்களில் தொடங்கியது. இதையொட்டி ஓட்டு எண்ணும் மையங்களில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டது.
இதில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 39 வார்டுகளில் 35ல் திமுக கூட்டணியும், இரு இடங்களில் தேமுதிகவும், சிபிஎம் 1 இடத்திலும் பாஜக ஒரு இடத்திலும்வென்றுள்ளன. மேலும் 2 இடங்களில் தேமுதிகவும் மற்ற அனைத்து வார்டுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களும் முன்னணியில் உள்ளனர்.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி போட்டியிட்டு படுதோல்வி அடைந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை ஒரு வார்டு கிடைத்துள்ளது. மறு தேர்தலிலும் அக் கட்சி தனித்தே நின்றது.
கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு வார்டு கூட கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நடந்துள்ள மறுதேர்தலில் அக்கட்சி 2 வார்டுகளில் வென்றுள்ளது. மேலும் இரு இடங்களில் முன்னணியில் உள்ளது. அத்தோடுபெரும்பாலான வார்டுகளில் அக்கட்சியே 2வது இடத்தையும் (அதிமுக இல்லாததால்) பிடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட 100 வார்டுகளில் 33 வார்டுகளுக்கு போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வுசெய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 67 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலை அதிமுக, மதிமுக புறக்கணித்தன. தேமுதிக சார்பில் 62, திமுக 36, பாஜக 34, காங்கிரஸ் 19,பாமக 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் 2 வேட்பாளர்கள் என மொத்தம் 416அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் தவிர 245 சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.
இதனால் திமுக கூட்டணிக்கும் தேமுதிகவுக்கும் இடையில் தான் நேரடி போட்டி நிலவியது. விஜய்காந்த் மிகத் தீவிரமாக சென்னையை சுற்றி சுற்றிவந்து பிரச்சாரம் செய்தார்.
ஆனால், 30 சதவீதமே வாக்குப் பதிவு நடந்தது. மறு வாக்குப் பதிவின்போதும் பல இடங்களில் அடிதடி, கள்ளஓட்டு உள்ளிட்ட அமர்க்களங்கள் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
இந்த மறு தேர்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications