நாளை முதல் சென்னை-டெல்லி ஏ/சி ஏழை ரதம்!
சென்னை:சென்னையிலிருந்து டெல்லிக்கு குளிர்சாதன வசதி கொண்ட புதிய ஏழைகள் ரதம் என்ற ரயில், நாளை முதல் இயங்கவுள்ளது. முதல் ரயிலைமுதல்வர் கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
வசதி குறைந்தோர், குளு குளு வசதியுடன் கூடிய ரயில்களில் டெல்லிக்குச் செல்ல முடியும் என்ற நிலை தற்போது இல்லை. இப்படிப்பட்டவர்களின்வசதிக்காக முற்றிலும் குளு குளு வசதி கொண்ட, குறைந்த கட்டணத்திலானா ரயிலை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
கரிப் ராத் (ஏழைகள் ரதம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும். அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டபெட்டிகள். படுக்கை வசதியுடன் கூடியவை 12 பெட்டிகள், 4 பெட்டிகள் இருக்கை வசதி கொண்டவை.
சென்னையிலிந்து ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை 6.10 மணிக்கு ஏழைகள் ரதம் ரயில் கிளம்பும். மறு நாள் காலை 10.15 மணிக்குடெல்லியை சென்றடையும். மறு மார்க்கத்தில் திங்கள்தோறும் சென்னைக்கு இந்த ரயில் இயக்கப்படும்.
சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே கூடுர், ஓங்கோல், விஜயவாடா, பலர்ஜா, நாக்பூர், போபால், பீனா, ஜான்சி, குவாலியர், ஆக்ரா ஆகியஇடங்களில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும்.
இந்த ஏழைகள் ரதம் ரயிலில் சென்னையிலிருந்து டெல்லி செல்ல ஏசி படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க ரூ. 892 மட்டுமே கட்டணமாகவசூலிக்கப்படும்.இருக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க கட்டணம் ரூ. 748 மட்டுமே.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜிடி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் முதல் வகுப்பு ஏசி கட்டணம் தற்போது ரூ. 1,455ஆக உள்ளது. ராஜதானி ரயிலில் இது 2,005 ஆக உள்ளது.
ஏழைகள் ரதம் ரயிலில் பயணிக்க இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
முதல் ஏழைகள் ரதம் ரயில், அமிர்தசரஸ்-சஹர்சா இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாட்னா-டெல்லி இடையே ஒரு ரயில்விடப்பட்டது. இந்த இரு ரயில்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது 3வதாக சென்னைக்கும், டெல்லிக்கும் இடையேஏழைகள் ரதம் ஓடத் தொடங்கவுள்ளது.
அடுத்து மும்பைக்கும், டெல்லிக்கும் இடையே ஒரு ரயில் விடப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications