முல்லை: மத்திய படை தேவையில்லை-கேரளா
டெல்லி:டெல்லி வந்த அமைச்சர் பிரேமச்சந்திரன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய படைகளின் பாதுகாப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருப்பதை ஏற்கமுடியாது.
முல்லைப் பெரியாறு அணைக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும் திறமையும், தகுதியும் கேரள காவல்துறைக்கு உண்டு. கேரள காவல்துறையைப்புறக்கணித்து விட்டு மத்திய படைகளை கேரளாவுக்கு அனுப்ப முயன்றால் அது அரசியலமைப்புச் சட்டத்தையும், இறையாண்மையையும்பாதிக்கும் செயலாக அமையும்.
தமிழகத்தில் கேரளாவுக்கு எதிராக 2 நாட்கள் நடந்த முற்றுகைப் போராட்டத்தின்போது கேரள போலீஸார் சீரிய முறையில் பணியாற்றி எந்தப்பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். விபரீதமாக ஏதாவது நடந்தால் அது கேரளாவுக்குத்தான் பாதிப்பு என்பதால் அதுபோன்றஅசம்பாவிதங்கள் நடக்காமல் கேரள காவல்துறை விழிப்போடு செயலாற்றியது.
நிலைமை இப்படி இருக்க திமுகவும், தமிழகத்தின் பிற கட்சிகளும் கேரளாவுக்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய படைகளின்பாதுகாப்பை கோருவதில் அர்த்தம் இல்லை.
தமிழகத்திற்குத் தண்ணீர் தருவதை கேரளா எதிர்க்கவில்லை. ஆனால் பழுதடைந்துள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு ஒட்டுப் போடுவதை நாங்கள் ஏற்க முடியாது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இப்போது கூட தமிழக அரசுடன் பேச்சு நடத்த கேரளா தயாராகவே உள்ளது. தமிழக அரசுதொடர்ந்துள்ள வழக்கில், கேரள அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நோட்டீஸுக்கு நான்கு வார காலத்திற்குள் உரிய பதிலை கேரள அரசுஅனுப்பும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கேரளாவுக்கு திருப்தி இல்லை. நாங்கள் 99 டிஎம்சி தண்ணீரைக் கோரியிருந்தோம். ஆனால் அது எங்களுக்குக்கிடைக்கவில்லை. தீர்ப்பின் முழு விவரத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். அது முடிந்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்யப்படும் என்றார் பிரேமச்சந்திரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications