கேரளத்தில் படகு கவிழ்ந்து 15 மாணவர்கள் பலி
கொச்சி:கேரள மாநிலம் கொச்சி அருகே நர்சரி பள்ளி மாணவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 மாணவர்கள், 3 ஆசிரியைகள் பலியாயினர். மேலும் 6பேரைக் காணவில்லை.
திருச்சூர் அருகேயுள்ள அங்கமாலியைச் சேர்ந்த செயின்ட் ஆண்டனி நர்சரி பள்ளி மாணவர்கள் 106 பேர், ஆசிரியர்கள் 12 பேர் கொச்சியைஅடுத்த கோதமங்கலம் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
கோதமங்கலம் தட்டக்காடு பகுதியில் உள்ள பறவைகள் சரணாலயத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, நேற்று மாலை அருகே உள்ள ஓவுங்கல்காவு என்றஇடத்தில் உள்ள பூதத்தான்கெட்டு நீர் தேக்கத்தில் படகு சவாரிக்கு சென்றனர்.
முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே உள்ளது இந்த நீர் தேக்கம் உள்ளது. 3 படகுகளில் மாணவர்கள் படகு சவாரி செய்தனர். அப்போது, ஒருபடகு கவிழ்ந்தது. அதில் 3 ஆசிரியர்கள், 57 மாணவர்கள் இருந்தனர்.
தண்ணீரில் விழுந்து தத்தளித்த மாணவர்களை வேறு படகுகளில் வந்தவர்கள் காப்பாற்றினர். 10 பேரைத் தான் உடனடியாக காப்பாற்ற முடிந்தது.
இரவு நேரமாகிவிட்டதால் மீட்புப் பணிகள் விரைவாக நடக்க முடியவில்லை. இரவில் நடந்த மீட்புப் பணியில் 3 ஆசிரியைகள், 15 மாணவர்களின்சடலங்கள் மீட்கப்பட்டன. இறந்த மாணவ, மாணவிகள் அனைவரும் 10 வயதுக்கும் குறைந்தவர்கள்.
கொச்சியில் இருந்து கடற்படையினரும் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் 6 மாணவர்களின் உடல்களைக் காணவில்லை.
மூன்று படகுகளும் லைசன்ஸ் பெறாத படகுகள் என்று தெரிய வந்துள்ளது. அதிலும் மூழ்கிய படகு பழுதடைந்த ஒன்று என்றும் தெரிகிறது.
இச் சம்பவம் தொடர்பாக அங்கமாலி நகரில் இன்று பந்த் நடக்கிறது. எர்னாகுளம் மாவட்டத்தில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications