ராமதாஸ் வார்னிங்-லாட்டரி கும்பல் அமுக்
சென்னை:தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்ததாக தமிழகம் முழுவதும் 259 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 ஆயிரத்து 788 ரூபாய் மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுக்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை ரகசியமாக நடந்து வருவதாகவும், போலீசார் அதைகண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சமீபத்தில் அறிக்கை விட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதைக்கண்டித்தும் தமிழக அரசைக் கண்டித்தும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தார்.
இதையடுத்து இந்த கள்ள லாட்டரி கும்பலை போலீசார் அமுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக டிஜிபி முகர்ஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் லாட்டரிச் சீட்டுவிற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி லாட்டரிச் சீட்டுக்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் அவர்களைப் பிடிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது. இதில் 259 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 12 ஆயிரத்து 788 ரூபாய் மதிப்புள்ள 29 ஆயிரத்து 670 லாட்டரிச் சீட்டுக்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து லாட்டரிச்சீட்டுக்களை வாங்கி தமிழகத்திற்குள் விற்பது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்று தடையை மீறிசெயல்படுவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
லாட்டரிச் சீட்டு விற்பவர்கள் மீதான வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று கூறியுள்ளார் முகர்ஜி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications