மதுரை கலெக்டர் உதயசந்திரன் டிரான்ஸ்பர்:கடும் கோபத்தில் தலித் பஞ். தலைவர்கள்
மதுரை:மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உதயச்சந்திரனை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்பாபட்டி,கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் கிராம தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதால்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த உதயச்சந்திரன் ஈரோடு ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். இதுமதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுங்காலமாக நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் தலித் பஞ்சாயத்துக்களுக்குஅமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிக்க மிகக் கடுமையாக பாடுபட்டவர் உதயச்சந்திரன். இவரதுஅயராத முயற்சியின் காரணமாகவே, கடந்த அக்டோபர் மாதம் இங்கு தேர்தல் நடந்து பஞ்சாயத்துத்தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
![]() |
வழக்கமாக பதவியேற்றவுடன் பஞ்சாயத்துத் தலைவர்கள் ராஜினாமா செய்து விடுவாகர்கள். ஆனால்உதயச்சந்திரனிடம் அந்த வேலை நடக்கவில்லை. யாரும் ராஜினாமா செய்யாமல் பார்த்துக் கொண்டார்.தேவையான உதவிகளை, பாதுகாப்பை அளிக்க ஏற்பாடு செய்தார்.
இதன் காரணமாக மூன்று பஞ்சாயத்துக்களும் இன்று சிறப்பாக, சுமூகமாக அமைதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அதேபோல, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல், மதுரைஉயர்நீதிமன்றக் கிளை வகுத்துக் கொடுத்த விதிமுறைகளின்படி மிகச் சிறப்பாக நடத்தியவர் உதயச்சந்திரன்.
ஜல்லிக்கட்டில் ஏதாவது உயிர்ப்பலி நேர்ந்தால் நான் பொறுப்பு என்று உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்கொடுத்து தடையை நீக்கச் செய்து ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்தார். அத்தோடு நில்லாமல் ஜல்லிக்கட்டுநடைபெறும் பகுதியிலேயே முகாமிட்டு, ஏற்பாடுகளை உன்னிப்பாக பார்வையிட்டார்.
பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர்களுக்கு வாட்டர் பாக்கெட் கூட கொடுத்து ஜல்லிக்கட்டில் எந்தவிதவிபரீதமும் நடைபெறாமல் இருக்க மெனக்கெட்டார்.
இப்படிப்பட்ட ஆட்சியரை திடீரென அரசு மாற்றி விட்டதால் மதுரை மக்களிடையே ஏமாற்றமும், அதிருப்தியும்நிலவுகிறது. ஆனால் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் தலித் பஞ்சாயத்துத் தலைவர்களோ இனிமேல்தங்களுக்கு பதவியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இதுகுறித்து உசிலம்பட்டியில் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சித் தலைவர் உதயச்சந்திரனைமாற்றம் செய்ததைக் கண்டித்து தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோர் பதவி விலக முடிவுசெய்துள்ளோம்.
உதயச்சந்திரன் ஆட்சித் தலைவர் ஆன பின்னர், கிராமப்புற மேம்பாட்டிலும், சுகாதார மேம்பாட்டிலும் தீவிர கவனம் செலுத்தினார். பல வளர்ச்சித் திட்டங்களையும் அவர்தொடங்கினார்.
இப்போது ஆட்சித் தலைவர் இல்லை என்று ஆகி விட்டதால், அவரது திட்டங்கள் தொடர்ந்துசெயல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது என்று பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறினர்.
ஆட்சித் தலைவர்கள் சிலர் மாறும்போது அந்த மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைவார்கள். அந்த அளவுக்குமக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர்கள் அவர்கள்.
முன்பு சேலம் ஆட்சித் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் ஆட்சித் தலைவராக இருந்தஇறையன்பு, கடலூர் ஆட்சித் தலைவராக இருந்த ககந்தீப் சிங் பேடி போன்றோர் வேறு இடங்களுக்குமாற்றப்பட்டபோதும் மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தார்கள், போராட்டங்கள் கூட நடந்தன.
அதேபோன்ற ஒரு எதிர்ப்பு, அதிர்ச்சி, அதிருப்தி உணர்வு மதுரை மக்களிடையே உதயச்சந்திரன் மாற்றத்தால்ஏற்பட்டுள்ளது என்பதை 3 தலித் பஞ்சாயத்துத் தலைவர்களின் பேச்சும் பிரதிபலிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications