விதவையை கற்பழித்த ஏட்டு-மக்கள் போராட்டம்!
உளுந்தூர்பேட்டை:புறக்காவல் நிலையத்தில் வைத்து 35 வயது விதவைப் பெண்ணை பலாத்காரம் செய்த 56 வயது தலைமைக் காவலரை போலீஸார் கைது செய்தனர்.அந்த ஏட்டுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்ததால் உளுந்தூர்ப்பேட்டையில் பரபரப்பு நிலவுகிறது.
உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள எடைக்கல் புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் வீரன். இவருக்கு வயது 56. இவரதுசொந்த ஊர் டி.கொளத்தூர். மனைவி, மகன், மகள், பேரக்குழந்தைகள் என உள்ள வீரன் பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகளேஉள்ளன.
![]() |
எடைக்கல் புதிய அஜீஸ் நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தார். இதுதொடர்பான வழக்குஉளுந்தூர்ப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
விபத்து இழப்பீட்டுத் தொகை பெறுவது தொடர்பாக நடராஜனின் மனைவி விஜயா (35) அடிக்கடி எடைக்கல் புறக்காவல் நிலையம் வந்து வீரனைசந்தித்து யோசனை கேட்டுள்ளார்.
திங்கள்கிழமை மாலையும் வந்துள்ளார். அப்போது வீரன், இரவு 8 மணிக்கு வா ஒரு கடிதம் தருகிறேன் என்று கூறியுள்ளார். அதை நம்பியவிஜயாவும் இரவு எடைக்கல் காவல் நிலையம் வந்துள்ளார்.
![]() |
அப்போது காவல் நிலையம் உள்ளே வீரனும், இன்னொரு காவலரும் போதையில் இருந்துள்ளனர். உள்ளே வந்த விஜயாவிடம் இருவரும்குளிர்பானம் தந்துள்ளனர். அதை விஜயா குடிக்க மறுத்தபோதும் குடிக்க வைத்துள்ளனர். இதையடுத்து மயக்க நிலைக்குப் போனார் விஜயா.இதைத் தொடர்ந்து இருவரும் அவரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் நிலையத்தின் கதவுகளை மூடிவிட்டு விஜயாவை வீரன்பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது அரை மயக்கத்தில் விஜயா போட்ட கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப் பார்த்த அந்தக் காவலர்ஓடி விட்டார். ஆனால் வீரன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார்.
நாலு தர்ம அடி போட்ட பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸர் விரைந்து வந்து வீரனை கைது செய்து அழைத்துச்சென்றனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கோர்ட்டுக்கு வீரனை வாகனத்தில் கூட்டிச் செல்லக் கூடாது, நடத்தியே கொண்டு போக வேண்டும் என்று கோரி பொதுமக்கள் திருச்சி-சென்னைநெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications