எக்ஸ் எம்.எல்.ஏ. அலுவலக பெண் தற்கொலை
சென்னை:முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கராத்தே பாலசுப்ரமணியத்தின் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பெண், காதல் நிறைவேறாத சோகத்தில்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அபிராமபுரத்தில் கராத்தே பாலசுப்ரமணியத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு சுமதி (26) என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை சுமதி அலுவலகத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில்பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரப்பாக்கம் அண்ணா தெருவில் வசித்து வரும் சம்பத் என்பவரின் 2வது மகள்தான் சுமதி. எம்.காம் வரை படித்துள்ளார். கராத்தேபாலசுப்ரமணியத்தின் காண்டிராக்ட் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார் சுமதி.
சுமதி 10வது படித்துக் கொண்டிருந்தபோது ஜான்சன் என்பவரைக் காதலித்து வந்தார். ஜான்சன் தற்போது போலீஸ்காரராக உள்ளார். வெவ்வேறுசமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த இருவரும் கடந்த 10 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இரு வீட்டாருக்கும் காதல் தெரிய வர கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பின்னர் சுமதியின் பெற்றோர் கல்யாணத்துக்கு சம்மதித்தனர்.
பொறுத்துப் பார்த்த ஜான்சன், தனது வீட்டாரின் எதிர்ப்பைமீறி சுமதியைக் கல்யாணம் செய்ய முடிவெடுத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்நண்பர்கள் முன்னின்று இருவ>ன் நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளனர். மார்ச் மாதம் கல்யாணத்தை நிச்சயித்திருந்தனர்.
நிலைமை எல்லை மீறிப் போவதை உணர்ந்த ஜான்சனின் பெற்றோர் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டனர். பின்னர் இரு வீட்டாரும் பேசி ஏப்ரல்23ம் தேதி கல்யாணத்தை நடத்த முடிவாகியது. காதல் கை கூடப் போகும் சந்தோஷத்தில் ஜான்சனும், சுமதியும் இருந்த நிலையில், கடந்த வாரம்ஜான்சன் வீட்டார் புதிய நிபந்தனையைப் பாட்டுள்ளனர்.
திருமணம் ஆகாத ஜான்சனின் அண்ணனுக்கு கல்யாணத்தை முடித்து விட்டே உங்களது கல்யாணம், அதுவரை காத்திருக்க வேண்டும் என்றுஅவர்கள் கூறியதால், சுமதி அதிர்ச்சி அடைந்தார். திட்டமிட்டபடி கல்யாணத்தை நடத்தியே தீர வேண்டும் என அவரது குடும்பத்தினர் கூறினர்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஜான்சனும் திடீர் பல்டி அடித்துள்ளார். அண்ணன் கல்யாணத்தை முடித்த பிறகே நமது கல்யாணம் எனசுமதியிடம் கூறியுள்ளார்.
ஜான்சனே இப்படிக் கூறி விட்டதால் மனம் உடைந்த சுமதி, நேற்று மதியம், அலுவலக கதவை மூடிக் கொண்டு துப்பட்டாவால் மின்விசிறியில்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்பு ஜான்சனின் அண்ணனுக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் சுமதி எழுதி வைத்துள்ளார். அதில், நானும், ஜான்சனும், 10வருடங்களாக காதலித்து வருவது உங்களுக்குத் தெரியும். நீங்கள் நினைத்திருந்தால் எங்களது கல்யாணத்தை நடத்தி வைத்திருக்கலாம். ஆனால்கடைசி நேரத்தில் எங்களது கல்யாணத்திற்கு தடையாக வந்து விட்டீர்கள் என்று அதில் சுமதி எழுதியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications