கேரளாவை எதிர்த்து திருப்பூரில் 23ம் தேதி பந்த்
திருப்பூர்:சேலம் கோட்டம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரளாவைக் கண்டித்து திருப்பூரிலும் வரும் 23ம் தேதி பந்த் நடத்தப்படவுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தை ஏற்கனவே அறிவித்தபடி நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்தியும், கோவை, திருப்பூர், போத்தனூர் ஆகியபகுதிகளை பாலக்காடு கோட்டத்தில் மீண்டும் சேர்கக் கோரும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து நேற்று கோவையில் முழு அடைப்புநடத்தப்பட்டது.
இதையடுத்து திருப்பூரில் வரும் 23ம் தேதி பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் உள்ள அனைத்து கட்சி நிரிவாகிகள்கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில்,
சேலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்தது. அதன் அடிப்படையில் சேலம் கோட்டத்தில்திருப்பூர், கோவை, போத்தனூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு சேலத்தில் புதிய ரயிலவே கோட்டம் செயலபட தொடங்கியது.
இந்நிலையில் சேலம் ரயிலவே கோட்டத்தை செயல்பட விடாமால் தடுப்பதற்கான முயற்சிகளில் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும்,அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. கோவை, போத்தனூர், திருப்பூர் பகுதிகளை பாக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்க விட மாட்டோம் எனஅறிக்கை விடப்படுகின்றன.
கேரள மாநில எம்பிக்கள் ரயிலவே அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதும், கேரள முதல்வரின் அறிவிப்புகளும் தமிழக மக்களின் உணர்வுகளைபுண்படுத்துவதாக அமைந்துள்ளது. ரயில்வே இணை அமைச்சர் வேலு சேலம் கோட்டம் பிரிக்கப்படுவதால் கேரளாவிற்கு எவ்வித பாதிப்பும்இல்லை.
கேரள எம்பிக்களின் ஒப்புதலோடுதான் நாடாளுமன்றத்தில் சேலம் கோட்டம் அறிவிக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் கேரளதரப்பில் மீண்டும் இந்த பிரச்சனையை கிளப்பி விட்டு உணர்வுகளை தூண்டிவிட்டு வருகிறார்கள்.
எனவே சேலம் ரயிலவே கோட்ட பகுதிகளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திருப்பூர், கோவை, போத்தனூர், ஈரோடு ஆகிய பகுதிகளைஎக்காரணத்தை கொண்டும் மாற்றம் செய்யக்கூடாது என்றும் இதன் மீது பேச்சு வார்த்தைக்கோ மறு பரிசீலனைக்கோ இடமில்லை என்றும்வலியுறுத்தி வருகிற 23ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருப்பூரில் பந்த் நடத்துவது என முடிவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பந்துக்கு இக் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதால் ஜவுளி ஆலைகள் முழுமையாக மூடப்படும். அதே போலஅனைத்துக் கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளதால் பஸ், ஆட்டோ, வேன், லாரிகள் இயங்காது. வர்த்தக நிறுவனங்களும் மூடப்படவுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications