மத்திய அரசுக்கு முலாயம் கட்சி ஆதரவு வாபஸ்!
லக்னெள:உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் அரசை கலைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கும் நிலையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணிஅரசுக்கு தந்து வரும் ஆதரவை சமாஜ்வாடி கட்சி வாபஸ் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரப் பிரதேசத்தில் முலாயம் ஆட்சியில் இருந்தால், அதிகாரத்தை பயன்படுத்தி, தேர்தல்தகிடுதித்தம் செய்து அவரே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற பயத்தில் காங்கிரசும் பாஜகவும் உள்ளன.
இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் முலாயம் சிங்குக்கு மக்களிடம் ஆதரவு அவ்வளவாகக் குறையவில்லை. சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் அவரது சமாஜ்வாடிக் கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தலா 25 சதவீத மக்களின் ஆதரவோடு சம பலத்தில்இருப்பது தெரியவந்துள்ளது.
பாஜகவும் காங்கிரசும் மிகவும் பின் தங்கி 3, 4வது இடத்தில் உள்ளன. இதனால் மீண்டும் தேர்தல் வந்தால் அரசு இயந்திரத்தை களமிறக்கி முலாயம்வெல்லக் கூடிய நிலை உள்ளது.
இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்பே முலாயமின் ஆட்சியைக் கலைக்க தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரசின் இந்த முயற்சிகளுக்குபாஜகவும் பகுஜன் சமாஜும் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 356வது அரசியல் சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக்கலைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுகவும் சரத்பவாரின் கட்சியும் இப்போது காங்கிரசின் முடிவுக்கு கட்டுப்பட முன் வந்துவிட்டன.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் பிடிவாதமாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதற்கு இந்தக் கட்சி தான்முக்கிய காரணம். மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்துடன் பிரதமரே நேரடியாக பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை.
முலாயமின் நண்பரும் அரசியல்-தொழில் புரோக்கருமான அமர்சிங்குக்கு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நல்ல நெருக்கம் உண்டு. அதைவைத்து விளையாடி வருகிறார் அமர்சிங்.
ஆட்சியைக் கலைக்கலாம் என மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்துவிட்டபோதும், அதைச் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டுள்ளதுகாங்கிரஸ். மார்க்சிஸ்ட் பயத்தை விட குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நினைத்து தான் காங்கிரஸ் அரண்டு போயுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக தேவையில்லாமல் உ.பி. மாநில அரசைக் கலைக்க அவர் ஒப்புக் கொள்வாரா என்ற அச்சமும் காங்கிரஸ் மத்தியில்நிலவுகிறது.
இந் நிலையில் முலாயமுக்கு பயம் தரும் வகையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமியைமத்திய உள்துறை செயலாளர் துக்கல் சந்தித்துப் பேசினார். அப்போது உத்தர பிரதேச சட்டம் ஒழுங்கு நிலைகுறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
நாட்களை எண்ண வேண்டிய நிலைக்கு தன்னை காங்கிரஸ் தள்ளிவிட்டதால் கடுப்பாகியுள்ள முலாயம், மத்தியஅரசுக்கு வெளியில் இருந்து தந்து வரும் ஆதரவை இன்று வாபஸ் பெற்றார்.
இன்று நடந்த தனது கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் கூட்டத்திற்கு பின் முலாயம் சிங் யாதவ் இதனைத்தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications