புதுச்சேரி-காரைக்காலை பிரிக்க போராட்டம்: தலையிடும் விஜயசாந்தி!
காரைக்கால்:காரைக்காலை தனியாகப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அமைக்கக் கோரி நடிகை விஜயசாந்தி தலைமையில் போராட்டம் நடக்கவுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் பகுதியை, புதுவை நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் தங்களது பகுதியை தனியாகப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
தற்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்த காரைக்கால் போராட்டக் குழு முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பின் புதிய நிர்வாகக் குழு தேர்வுசெய்யப்பட்டு, அதன் முதல் செயற்குழுக் கூட்டம் நடந்தது.
போராட்டக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காரைக்காலை தனியூனியன் பிரதேசமாக அறிவிப்பதே பிரச்சினைக்கு ஒரே தீர்வு.
![]() |
புதுவை யூனியன் பிரதேச ஆட்சி முறையில் புதுவை அபரிமிதமான வளர்ச்சியையும், காரைக்கால் பிரதேசம் முற்றிலும் நேர்மாறாக அனைத்துவகையிலும் புறக்கணிக்கப்பட்டு பின் தங்கிய நிலையிலும் உள்ளது.
பூலோக ரீதியில், காரைக்கால் புதுவையிலிருந்து வெகுதூரம் உள்ளதாலும், தனி யூனியன் பிரதேசமாக காரைக்காலை மத்திய அரசு அறிவிக்கக்கோரி அறவழிப் போராட்டங்களை மக்கள் சக்தியைத் திரட்டி நடத்தவும். முதல் கட்டமாக 28ம் தேதி முதல் தெருமுனைப் பிரசாரம் நடத்தவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, தனி தெலுங்கானா கோரி போராடி வரும் நடிகை விஜயசாந்தி தலைமையில் போராட்டக் குழுக் கூட்டத்தை ஏப்ரல் கடைசியில்நடத்துவது. ஆளுநரை சந்தித்து தனி காரைக்கால் யூனியன் பிரதேச கோ>க்கையை வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்-நாகூர் அகல ரயில் பாதையை அமைக்க ரூ. 33 கோடியை புதுவை அரசு அளித்தால், 6 மாதத்தில் காரைக்காலுக்கு ரயில் வரும் என்றஉத்தரவாதத்தை மத்திய ரயில்வே இணை அமைச்சர் அறிவித்து 6 மாதங்களாகியும் காரைக்கால் பகுதி மக்களின் நலனுக்காக 33 கோடியை அளிக்கமுதல்வர் ரங்கசாமி இதுவரை முன்வரவில்லை. இதைக் கண்டித்தும் போராட்டம் நடத்துவது,
மருத்துவக் கல்லூரியிலும், மக்கள் தொகை அடிப்படையில் காரைக்கால் பகுதிக்கு இட ஒதுக்கீடு செய்ய புதுவை அரசை வலியுறுத்துவது,
காரைக்கால் பகுதியில் விமான நிலையம் வருவது காரைக்கால் பகுதியின் வளர்ச்சிக்கு ஏற்புடையது என்றாலும், காரைக்கால் பிரதேச மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications