ராஞ்சி-3 குழந்தைகளை எரித்து தாய் தற்கொலை
ராஞ்சி:கணவரால் ஏற்பட்ட கடன் சுமையைத் தாங்க முடியாத மனைவி தனது 3 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்பிரகாஷ் பர்ன்வால். சிறு வியாபாரியான இவர் ஏராளமான பேரிடம் கடன்வாங்கிக் குவித்தார்.
கடனைக் கட்ட முடியாமல் தடுமாறிய அவர் தலைமறைவாகி விட்டார். கடந்த 3 மாதங்களாக அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.கிட்டத்தட்ட ரூ. 1லட்சம் வரை அவர் கடன் வாங்கியிருக்கிறார்.
கணவரிடம் கடன் கொடுத்தவர்கள் தன்னிடம் வந்து பணம் கேட்டு தொல்லை செய்ததால் பர்ன்வாலின் மனைவி அனிதா (32) மனம் உடைந்தார்.இதையடுத்து தனது குழந்தைகள் ஜூஹி (12), ருசி (10), கோலு (7) ஆகியோருடன் தீக்குளித்தார் அனிதா.
இதில் 4 பேரும் முற்றிலும் உடல் கருகி கோரமாக இறந்து போயினர். இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications