நிதி-நில விவகாரம்-ராமோஜிராவுக்கு ஜெ ஆதரவு
சென்னை:ஆந்திராவைச் சேர்ந்த ஈநாடு பத்திரிக்கை அதிபர் ராமோஜி ராவுக்கு சொந்தமான மார்க்தரிசி நிதி நிறுவனத்தில் ஆந்திர போலீஸார் சோதனைநடத்தியதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டித்துள்ளார்.
ஈநாடு தெலுங்குப் பத்திரிக்கையை நடத்தி வருபவர் ராமோஜி ராவ். திரைப்பட நகரையும் அங்கு நிர்மாணித்துள்ளார். இதுதவிர மார்கதரிசி நிதிநிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இந்த நிதி நிறுவனம் பெருமளவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஆந்திராவைச் சேர்ந்த ஒருஎம்.பி பரபரப்புப் புகாரை எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் அவர் நில சுருட்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ஆந்திரா முழுவதும் நில மோசடி செய்தோர் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் என அரசு அறிவித்தது. இந் நிலையில் தான் தலித்களிடம் இருந்து முறைகேடாக நிலம் வாங்கி திராட்சை தோட்டமும் பண்ணை வீடும்கட்டியதாக ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆந்திர அரசு.
இந் நிலையில், மார்க்கதரிசி நிதி நிறுவனத்தில் நேற்று ஆந்திர போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு ஜெயலலிதா கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் ஈநாடு பத்திரிகையை நடத்தி வருபவர் ராமோஜிராவ். இவர்மார்கதரிசி என்ற நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
ஆந்திர முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஆதாரத்துடன் ஈநாடு பத்திரிகையில் வெளியிட்டார். இதனால் எரிச்சலடைந்தஆந்திர காங்கிரஸ் அரசு மார்கதரசி நிதிநிறுவனத்தில் போலீசாரை வைத்து சோதனை நடத்தியது. இதனை ஆந்திர மாநில எதிர்க்கட்சிகளும்,பத்திரிகையாளர் சங்கமும் வன்மையாக கண்டித்தன.
நிதி நிறுவனத்தில் ஏதாவது முறைகோடுகள் நடத்திருந்தால் அதை விசாரிக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு தான் உண்டு. ஆனால் ஆந்திர அரசுஎந்தவித அதிகாரமும் இல்லாமல் பழிவாங்கும் எண்ணத்தில் மார்கதரிசி நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளது.
இந்த சோதனை ஈநாடு பத்திரிக்கையை மிரட்டும் நோக்கத்தில் நடத்தப்பட்டது. ஆளுங்கட்சியின் இது போன்ற நடவடிக்கைகளால்ஆளுங்கட்சியின் அராஜகம் மற்றும் அவர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதற்கு இது தடையாக அமைந்துவிடும்.
இது ஜனநாயக விரோதம், இதை கண்டிக்காவிட்டால் அது மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்குஆதரவளிப்பது போலாகிவிடும். ஆந்திர அரசின் இத்தகைய செயலை அதிமுகவும் வன்மையாக கண்டிக்கிறது என ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராமோஜி ராவ் மீது ஆரம்பித்த விசாரணை ஜெயலலிதாவின் திராட்சை தோட்டம் வரை நீண்டுள்ள நிலையில் ஆந்திர அரசை கண்டித்து ஜெயலலிதாஇந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications