ஆந்திர அரசு மீது ஜெ பாய்வது ஏன்?-கருணாநிதி
சென்னை:இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ள பாதக அம்சங்களை நீக்கக் கோரி, நடுவர் மன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்படவேண்டிய மறு ஆய்வு மனுவில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் உள்ளது. அதன் பின்னரே அந்த மனுவை நடுவர் மன்றம்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். அதன்படி மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய இன்னும் இரண்டரை மாத கால அவகாசம் உள்ளது.
தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.அதில் கலந்து கொண்ட அதிமுக பிரதிநிதிகள், இதுதொடர்பாக சட்டம் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை கலந்து ஆலோசித்து அதன் பின்னர் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம் என யோசனை தெரிவித்தனர்.
எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த பின்னரும் கூட ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் ஜெயலலிதா, கர்நாடகத்தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசை விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் எதையும் பேசி குழப்பம் ஏற்படுத்தாமல்இருப்பது மிகவும் நல்லது.
காவிரிப் பிரச்சினையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியை விட தமிழக காங்கிரஸ் கட்சி மிகவும் மெத்தனமாக இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்களுக்கு விரோதமான கருத்து எதையும்வைக்கவில்லை.
ஜெயலலிதா இந்தக் கூட்டத்துக்கு வராவிட்டாலும் கூட, அறிக்கைகள் விடுவதற்கு முன்பு, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கேட்டு, போதியதகவல்களைப் பெற்றுத் தெளிவடைந்து கொண்டு விடுவது மிகவும் நல்லது.
ஜெயலலிதாவுக்கு தனது பெயரில் ஏதாவது ஒரு அறிக்கை ஏடுகளில் வந்தாக வேண்டும். தமிழகத்தில் அவருக்கு எந்தப் பொருளும்கிடைப்பதில்லை. இதனால்தான் திருவெண்ணை நல்லூரில் என்ன நடக்கிறது, திண்டிவனத்தில் என்ன நடக்கிறது என்றெல்லாம் அறிக்கை விடஆரம்பித்து விட்டார்.
ஆந்திராவில் நடந்த போலீஸ் சோதனையைக் கண்டித்து அறிக்கை விடும் ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் ஏடுகளையும், ஏடுகளைநடத்தியவர்களையும், ஏடுகளின் செய்தியாளர்களையும் என்ன பாடுபடுத்தினார், எத்தனை ஏடுகள் மீது வழக்கு தொடுத்தார், எத்தனைபத்திரிக்கையாளர்களை கைது செய்து சிறையிலே அடைத்தார் என்பதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு ஆந்திர அரசு மீது புகார்கூறியிருக்கிறார்.
ஆந்திராவில் ஜெயலலிதா பெயரிலே உள்ள இடம், ஆந்திர அரசுக்குச் சொந்தமானது என்று நோட்டீஸ் வந்ததுதான் இந்த அறிக்கைக்கு முக்கியக்காரணம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications