கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்-இன்று அடிக்கல்
சென்னை:சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது. ரூ. 510 கோடி செலவில் இத் திட்டம்செயல்படுத்தப்படவுள்ளது.
மீஞ்சுரில் காட்டுப்பள்ளி என்ற இடத்தில் இந்த கடல் நீரை குடிநீராக்கும் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. ஹைதராபாத்தைதலைமையிடமாக கொண்ட ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனமும் ஸ்பெயின் நாட்டின் பெபிசா நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றஉள்ளன.
இது குறித்து ஐ.வி.ஆர்.சி.எல் நிறுவனத் தலைவர் சுதிர் ரெட்டி கூறுகையில்,
60 ஏக்கர் நிலத்தை அரசிடமிருந்து குத்தகை எடுத்து இந்த ஆலையை அமைக்கவுள்ளோம். இங்கு கடல் நீரிலிருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் தயாரிக்கப்படும். ஒரு லிட்டர் தண்ணீரை 4.8 காசுகள் என்ற விலைக்கு குடிநீர் வாரியத்திற்கு வழங்கவுள்ளோம்.
25 ஆண்டுகள் தொடர்ந்து நீரை வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத் திட்டத்தினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சுற்றுபுற சூழலும் பாதிக்கப்படாது என்றார்.
ஆலையின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடையும். அன்றைய தினத்திலிருந்து குடி நீர் தயாரிப்பும் தொடங்கும்என்றார்.
இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் இத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications