சென்னையில் மகிந்திரா-ரெனால்ட்-நிஸ்ஸான்இணைந்து மாபெரும் கார் தொழிற்சாலை
சென்னை:சென்னை அருகே ஓரகடத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரெனால்ட், நிஸ்ஸான் ஆகிய முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ரூ.4,000 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலையை அமைக்கவுள்ளன.
சிப்காட் தொழிற் பூங்காவில் இந்த கார் தொழிற்சாலை அமையுள்ளது. இந்தியாவிலேயே ஒரே இடத்தில் அமையும் மாபெரும் தொழிற்சாலையாகஇது இருக்கும். இதற்கான ஒப்பந்தத்தில் இன்று இந்த நிறுவனங்கள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்திட்டன.
![]() |
என்ஜின் தயாரிப்பு, கட்டுமானம், பெயிண்ட் ஷாப் உள்பட கார் தயாரிப்புக்கான அனைத்துப் பிரிவுகளும் இங்கு அமைக்கப்படவுள்ளன.
முதல் கட்டமாக ஆண்டுக்கு 4 லட்சம் வாகனங்கள் இங்கு தயாரிக்கப்படும். 2009ம் ஆண்டு முதல் இங்கு வாகன தயாரிப்பு தொடங்கும்.
இந்த கூட்டு நிறுவனத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா 50 சதவீத முதலீடும்ம், ரெனால்டும், நிஸ்ஸானும் தலா 25 சதவீத முதலீடும் செய்யவுள்ளன.இதன் மூலம் நேரடியாக 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ரெனால்ட் துணை செயல் தலைவர் பேட்ரிக் பெலேட்டா நிஸ்ஸான் துணை செயல் தலைவர் கார்லோஸ் டிராவர்ஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
வாகன தயாரிப்பில் மிக முக்கிய கேந்திரமாக சென்னை விளங்குகிறது. சிறந்த மனித ஆற்றல் வளமும், உயர் தர செயல் திறன் மிக்கதொழிலாளர்களும், மிகச் சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் நிலவுவதால் தான் தமிழகத்தை தேர்வு செய்தோம் என்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் ரெனால்ட் கார்கள் மகிந்திரா நிறுவன வர்த்தக பிரிவின் மூலம் விற்கப்படும். அதே நேரத்தில் நிஸ்ஸான், தான் தயாரிக்கும்கார்களை தனது வர்த்தக பிரிவின் மூலமே விற்பனைக்கு விடவுள்ளது. மேலும் நிஸ்ஸான் தனது கார்களை இங்கிருந்து ஏற்றுமதியும்செய்யவுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications