கேப்டன் மண்டபம்-இன்னொரு மனுவும் தள்ளுபடி
சென்னை:விஜயகாந்த் திருமண மண்டபத்தை இடிப்பதற்கு காலகெடுவை நீட்டிக்க கோரி, மண்டபத்தை முன்பதிவு செய்தவர்கள் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது..
கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை தேசியநெடுஞ்சாலைத்துறை நில ஆர்ஜிதம் செய்தது. இதை எதிர்த்து விஜய்காந்தின் மனைவி பிரேமலதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைதள்ளுபடி செய்த நீதிமன்றம், மண்டபத்தை 4 வாரத்திற்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந் நிலையில் வழக்கறிஞர்கள் குணசேகரன், இளங்கோ ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்தஏற்கனவே முன் பதிவு செய்துள்ளோம். கடைசி நேரத்தில் வேறு மண்டபம் கிடைக்காது, இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவேமண்டபத்தை இடிப்பதற்கு கால நீடிப்பு தர வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத் துறைசொலிசிட்டர் ஜெனரல் கோபாலன் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆகியோர் ஆஜராகி, தமிழ்ப் புத்தாண்டு அன்று மேம்பாலம்கட்டுவதற்கான தொடக்க விழா நடக்கவிருக்கிறது. அதனால் மேலும் கால அவகாசம் தர கூடாது, வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றனர்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
எங்களை பார்த்து பொறாமை-விஜய்காந்த்
இந் நிலையில் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தேமுதிக மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து விஜயகாந்த் நிருபர்களிடம்பேசுகையில்,
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் தேமுதிக 29 சதவீத ஓட்டு வாங்கி வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள்கலக்கமடைந்துள்ளன. ஆளும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தேமுதிகவை கண்டு பொறாமை அடைந்துள்ளனர். அனைத்து கட்சிதலைவர்களும் மேடைகளில் தேமுதிகவை சாடி வருகின்றனர். இதிலிருந்தே எங்கள் வளர்ச்சியை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. தேமுதிகநடத்தும் விழா, கூட்டங்களில் பேனர், போஸ்டர், மேடை அமைக்க தடை விதித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 40 சதவீத விவசாய நிலம், காவிரி ஆற்றை நம்பி உள்ளது. ஆனால், கர்நாடகாவில் 17 சதவீத விவசாய நிலம் மட்டுமே காவிரி ஆற்றைநம்பி உள்ளது. தமிழகத்துக்கு போதுமான நீர் ஆதாரம் பெற்று தரும் தீர்ப்பாக காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அமையவில்லை.
இதற்காக தான் நான் கட்சி பெயரை குறிப்பிடாமல் தேசிய கட்சிகளுக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டாம் என்று தெரிவித்தேன். இதைஅரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கி விட்டனர். மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக மத்திய அரசுசெயல்படவில்லை. சிலரின் நன்மைக்காக செயல்படும் அரசாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை பிடிக்கும். நான் முதல்வராவேன் என என்றுமே சொன்னதில்லை. மக்களுக்கு நல்லதுசெய்வேன், எனக்கு ஓட்டளியுங்கள் என்று தான் நான் கேட்டு வருகிறேன். மக்கள் தீர்ப்பே நான் முதல்வராவதை தீர்மானிக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications