இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்:ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்!
ராமேஸ்வரம்:நாகை மாவட்ட மீனவரைச் சுட்டுக் கொன்ற பரபரப்பு நீங்குவதற்குள் இன்று அதிகாலை மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடுநடத்தியது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை வீரர்கள்துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், கலியபெருமாள் என்ற மீனவர் குண்டு பாய்ந்து இறந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்நடத்தியுள்ளது.
ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 450 மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள்இந்தியப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்கள் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் தங்கச்சி மடத்தைச்சேர்ந்த சேவியர் என்ற மீனவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை கரைக்குக் கொண்டு வந்த மீனவர்கள், சேவியரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த சில நாட்களாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 23ம் தேதி ராமநாதபுரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று காணமல் போன 7 மீனவர்கள் இன்று காலை பத்திரமாக கரை திரும்பினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications