காவிரி விவாதம்: தமிழக-கர்நாடக எம்பிக்கள்கூட்டத்தை கூட்டும் சபாநாயகர் சாட்டர்ஜி!
டெல்லி:காவிரி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது குறித்து தமிழக, கர்நாடக எம்பிக்களின் கூட்டத்தை மக்களவை சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி கூட்டியுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து வரும் கர்நாடகம் இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்ப முடிவு செய்துள்ளது. இதற்குதமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
ஒருவேளை விவாதம் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது, எப்படி பதிலளிப்பது என்பது குறித்து தமிழகத்தின் அனைத்துக் கட்சிஎம்பிக்களுக்கும் டெல்லியில் வைத்து கிளாஸ் எடுத்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்.
இந் நிலையில் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் கிளப்ப மாஜி பிரதமர் தேவே கெளடா தலைமையில் அனைத்துக் கட்சி கர்நாடக எம்பிக்களும்தீவிரமாக உள்ளனர். இன்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை நேரில் சந்தித்த அனைத்துக் கட்சி கர்நாடக எம்பிக்கள் குழு காவிரி தொடர்பானவிவாதத்துக்கு அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
நாடாளுமன்ற விதி 193ன் கீழ் மாநிலத்துக்கு (கர்நாடகத்துக்கு) விளைந்துள்ள அநீதி குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.
அவர்களுக்கு பதிலளித்த சோம்நாத், இது குறித்து தமிழக எம்பிக்களுடனும் பேசியிருக்கிறேன். இந்தப் பிரச்சனை மக்களின் உணர்ச்சிகளைப்பிரதிபலிக்கும் ஒன்று. எனவே, இரு தரப்பு எம்பிக்களும் சந்தித்துப் பேசி இந்த விவாதத்தை எப்படி நடத்தலாம் என்பது குறித்து ஒருவரையறையை உருவாக்கிக் கொள்வது நல்லது என்றார்.
கர்நாடக எம்பிக்கள் குழு முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் அனந்த குமார் தலைமையில் சபாநாயகரை சந்திதது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications