மன நோயாளி வயிற்றில் ஹார்டுவேர் கடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்த மன நோயாளியின் வயிற்றில் 200க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்கள் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் அனைத்துப் பொருட்களும் வெற்றிகரமாகஅகற்றப்பட்டன.

மதுரை அருகே உள்ள இளையாங்குடியைச் சேர்ந்தவர் ஜம்மு கான் (32). டெய்லரான இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலைபாதிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு மீண்டும் மன நலம் பாதிக்கப்பட்டது. மேலும், வயிற்று வலியும் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரைமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் ஏதேதோ மர்மப் பொருட்கள் இருப்பதுதெரிய வந்தது.

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ஜம்மு கானை கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தவே, ஜம்முகானை உறவினர்கள்சென்னைக்கு அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர் ஸ்ரீகுமாரி தாமோதரன் தலைமையிலான மருத்துவ நிபுணர் குழு ஜம்மு கான் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போதுஅவரது வயிற்றில் இரும்புப் பொருட்கள் இருப்பது தெரிய வந்து அதிர்ந்தனர்.

உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சையில் வெளி வந்த பொருட்களைப் பார்த்து டாக்டர்கள் குழுவிக்கித்துப் போனது. காரணம், ஒரு இரும்புக் கடையே அவரது வயிற்றில் இருந்ததுதான்.

ஜம்மு கான் வயிற்றிலிருந்து வெளிவந்த பொருட்களின் பட்டியல்:

நகைக் கற்கள் - 26.
சிறு இரும்புத் துண்டுகள் - 13.
ஆணி - 10.
ஹேர் பின் - 10.
நாணயங்கள் - 6.
மோதிரம் - 6.
சோடா பாட்டில் மூடி - 6.
சிறு கற்கள் 5
சாவி -4.
கத்திரிக்கோல் -3.
கரண்டி - 3.
குண்டூசி - 3.
தாழ்ப்பாள் -3.
பூட்டு - 2.
துணி மாட்டும் கொக்கி -1.
கடிகாரம் - 1.
கொசுவர்த்தி ஸ்டாண்டு - 1.
செயின் -1.
பேனா மூடி - 1.
பொம்மை - 1.
ஜிப் -1.
ருத்ராட்ச கொட்டை -1.
மார்பிள் கல் (உடைந்தது) - 1.
பிளேடு -1 என மொத்தம் 236 வகையான இரும்புப் பொருட்கள் ஜம்மு கான் வயிற்றில் கிடந்தன.

கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ எடை கொண்ட இவை அத்தனையும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து ஜம்மு கானுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டாக்டர் குமாரி கூறுகையில், இவ்வளவு பொருட்களையும் வயிற்றில் சுமந்து கொண்டு ஜம்மு கான் எப்படி வழக்கம் போல இருந்தார்என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது.

மன நோய் காரணமாக கண்ணில் பட்டதை எல்லாம் வாயில் போட்டு வந்துள்ளார் ஜம்மு கான். ஆனால் இவை அனைத்தும் இரைப்பையின் ஒருஓரத்தில் சேர்ந்து வந்துள்ளது. இதனால் சாப்பிடுவதிலும், செரிமானத்திலும் இவருக்குப் பிரச்சினை ஏற்படவில்லை.

சாதாரணமாக வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு மூலமாக இதுபோன்ற பொருட்கள் வந்து விடும். ஆனால் இவ்வளவு பொருட்கள் எப்படிவயிற்றிலேயே தேங்கி விட்டன என்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.

ஜம்மு கான், சாதாரண மனிதரே அல்ல! சரியான எஃகு மனிதர்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+