ஏழைகளுக்கு உதவாத பட்ஜெட்: ஜெ.
சென்னை:மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழைகளுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் தொடர்ச்சிதான் இந்த பட்ஜெட். ஏழைகளுக்கு பாதகமாகவும், பணக்காரர்களுக்கு சாதகமாகவும்இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
பணக்காரர்களை வாழ வைத்து, ஏழைகளுக்கு மறைத்துக் கொள்ளும் தன்மையைக் காட்டுகிறது. பல்வேறு வரிகளை குறைத்திருப்பதாக கூறுவதுகண்துடைப்பு.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள உர மானியம் உள்ளிட்ட சில அறிவிப்புகள் விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லை. விவசாயக்கடனுக்கான வட்டி விகிதத்தை கொஞ்சம் கூட குறைக்காதது கொடுமையானது.
சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு கூடுதல் பணத்தை ஒதுக்கி விட்டதால் மட்டும் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி விடமுடியாது.
இந்த பட்ஜெட்டினால், ஏழைகள் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு தங்களுக்குத் தேவையானவற்றுக்கு அரசின் உதவியை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளி விடும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
நாய் உணவு விலை குறைப்பு: அத்வானி கண்டனம்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பட்ஜெட் குறித்துக் கருத்து கூறுகையில், உணவுப் பொருள் விலை உயர்வால்தான் பஞ்ஜாப்,உத்தரகாண்ட் மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆனால் அதிலிருந்து இந்த அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றுதெரிகிறது.
சாதாரண மக்கள் அதிகம் பயன்படுத்தும் பருப்பு, அரிசி விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், நாய், பூனைக்கான இறக்குமதிசெய்யப்பட்ட உணவுப் பொருளின் விலையைக் குறைத்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்றார் அத்வானி.
ராமதாஸ்: வேளாண்மைக்கும், உழவர்களுக்கும் இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. புகையிலையை உள்ளடக்கிய பொருட்களுக்குவரி விதிப்பு பாராட்டுக்குரியது. பீடி, சிகரெட், பான் பராக் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது வரியை உயர்த்தியிருப்பதுமக்கள் மீது அரசுக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது.
கிருஷ்ணசாமி, காங். தலைவர்: 9வது முதல் 12ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்து ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் உதவித் தொகைஅளிக்கும் திட்டம் மிகவும் வரவேற்புக்குரியது, புரட்சிகரமானது. கிராமப்புற ஏழை மாணவ, மாணவியருக்கு இந்தத் திட்டம் வெகுவாக உதவும்.
விஜயகாந்த்: சில திட்டங்கள் வரவேற்புக்குரியவை, சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால்தான் தெரியும், சில திட்டங்களை தவிர்த்திருக்கலாம்.
மாணவர்களுக்கு உதவித் தொகை, சிமென்ட் மீதான விலைக் குறைப்பு, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைப்பு உள்ளிட்ட சிலஅறிவிப்புகளை வரவேற்கலாம்.
விவசாயத்துறைக்கும் அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களும் பரவாயில்லை என்று கூறும்அளவுக்கு உள்ளன. இருந்தாலும் பணம் ஒதுக்குவதால் மட்டும் விவசாயிகளை முன்னேற்றி விட முடியாது.












Click it and Unblock the Notifications