துப்பாக்கி குண்டு-சிபிஎம் தலைவர் மீது கேஸ்
சென்னை:சென்னை விமான நிலையத்திற்குத் துப்பாக்கித் தோட்டாக்களுடன் வந்த விவகாரம் தொடர்பாக கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசெயலாளர் பினராயி விஜயன் மீது சென்னை விமான நிலைய போலீஸார் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநில சிபிஎம் செயலாளர் பினராயி விஜயன் கடந்த 16ம் தேதி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போதுஅவரது சூட்கேஸை சோதனையிட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அதில் 5 துப்பாக்கித் தோட்டாக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து விஜயனிடம் கேட்டபோது, துப்பாக்கி வைத்திருக்க என்னிடம் உரிமம் உள்ளது. தவறுதலாக இந்த தோட்டாக்கள் வந்து விட்டதாககூறினார். பின்னர் தோட்டாக்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், 15 நாட்களில் உரிய ஆவணங்களைக் காட்டி இவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு விஜயனிடம் கூறி அவரை தொடர்ந்து பயணிக்க அனுமதித்தனர்.
ஆனால் விஜயன் தோட்டாக்களைத் திரும்பப் பெற வரவில்லை. இதையடுத்து அவர் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
விஜயன் வைத்திருந்தது இறக்குமதி செய்யப்பட்ட தோட்டாக்கள் என்றும், அவை விஜயனுக்கு சொந்தமானவை அல்ல என்றும் போலீஸ் தரப்பில்கூறப்படுகிறது. எனவே விரைவில் விஜயனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications