காலிலும் விழுவார், கழுத்தையும் அறுப்பார்
விழுப்புரம்:வைகோ காலிலும் விழத் தயங்க மாட்டார். ஆனால் காலை வாரி விடவும் செய்வார், கழுத்தையும் அறுக்கத் தயங்க மாட்டார் என்று எல்.கணேசன்காட்டமாக கூறியுள்ளார்.
விழுப்புரம், கடலூர் மாவட்ட போட்டி மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்தில் செஞ்சி ராமச்சந்திரன் பேசுகையில்,எந்தக் கொள்கைக்காக மதிமுக உருவாக்கப்பட்டதோ அதை தனது சுயநலத்திற்காக குழிதோண்டிப் புதைத்து விட்டார் வைகோ.
வைகோ, கொள்கையில் தெளிவில்லாதவர், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கூறிக் கொண்டு வேஷம் போடுகிறார். அரசியல் நேர்மை,லட்சியத்தில் உறுதி என எதுவுமே இல்லாதவர் வைகோ என்றார்.
எல்.கணேசன் பேசுகையில், நம்மைத் தவிர வேறு யாரும் வளர்ந்து விடக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர் வைகோ. வைகோவுடன், மதிமுகதொடங்கியபோது இருந்த யாருமே இப்போது மதிமுகவில் இல்லை.
ஹிட்லரின் கொடுமை தாங்க முடியாமல் யூதர்கள் ஓடியது போல எல்லோரும் ஓடி விட்டனர். இவ்வளவு நடந்தும் கூட, எங்களுக்கு சிறு சிராய்ப்புகூட இல்லை என்று வைகோ கூறுகிறார் என்றால் அவருக்கு வெட்கம் இல்லையா.?
துரோகம் செய்வதற்கு சளைக்காதவர் வைகோ. கருணாநிதிக்கு செய்தார், வாஜ்பாய்க்கு செய்தார், ஏன், ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்வைகோ. காலிலும் விழுவார், வாரியும் விடுவார், நம்ப வைத்து கழுத்தையும் அறுப்பார். அவர்தான் வைகோ என்றார் எல்.கணேசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications