மு.க.ஸ்டாலின்-55: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 55வது பிறந்த நாளாகும். இதையொட்டிதிமுக தலைவர்கள், பல கட்சித் தலைவர்கள், திமுக முன்னணியினர், அதிகாரிகள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலினின் 55வது பிறந்த நாளை திமுகவினர் இளைஞர் எழுச்சி தினமாக இன்று கொண்டாடினர். இன்று அதிகாலை தனது குடும்பத்துடன்கோபாலபுரம் சென்ற ஸ்டாலின் அங்கு முதல்வரும், தந்தையுமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் குடும்பத்தோடு அவர் அங்கு கேக் வெட்டினார். அதன் பின்னர் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு வீட்டுக்குச் சென்றார். அங்கு பல்வேறுகட்சித் தலைவர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொஹைதீன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் எம்.பி. ஆரூண், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், ஜனநாயகமக்கள் கட்சித் தலைவர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினர்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில், கேக் வெட்டினார். தென் சென்னை மற்றும் வட சென்னை மாவட்ட திமுக சார்பில் தனித் தனியாககேக் வெட்டப்பட்டது. திமுகவினர் வரிசையில் நின்று ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சகோதரர்கள் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் க.அன்பழகன், பொன்முடி, பரிதி இளம்வழுதி, ஏ.வ.வேலு,ரேஷ்ராஜன், தங்கம் தென்னர, கீதா ஜீவன், தமிழரசி உள்ளிட்ட அமைச்சர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பல வகையான பரிசுகளும் குவிந்தன. ரூபாய் நோட்டு மாலை, வெண்புறா, பொன்னாடை, வள்ளுவர் கோட்ட மாதிரி, உதயசூரியன் வடிவிலானகேக் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
மத்திய அமைச்சர்கள் ரகுபதி, பழனிமாணிக்கம்,சுப்புலட்சுமி ஜெகதீசன், தலைமைச் செயலாளர் திரிபாதி, உள்துறைச் செயலாளர் மாலதி, டிஜிபிமுகர்ஜி, ஆணையர் லத்திகா சரண், மாநகராட்சி ஆணையர் லக்கானி, உள்ளாட்சித் துறை கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள்அமைச்சர் இந்திரகுமாரி, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, நடிகர்கள் நெப்போலியன், குமரிமுத்து, சந்திரசேகர், கவிஞர் பா.விஜய்உள்ளிட்டோரும் ஸ்டாலினை வாழ்த்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications