டாஸ்மாக்கில் இனி குளு குளுன்னு குடிக்கலாம்!!
சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதி நவீன பார்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் குடிமக்கள்வசதியாக, சொகுசாக, ரவுசாக அமர்ந்து சரக்கு சாப்பிட குஷன் சீட், கண்ணாடி டேபிள் ஆகியவையும் போடப்படுகின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் தனியார் மதுக் கடைகள் ஒழிக்கப்பட்டு அனைத்தையும் அரசே எடுத்துக் கொண்டது. தமிழக அரசின் டாஸ்மாக்நிறுவனமே தற்போது மதுக் கடைகளை நடத்தி வருகிறது.
கடைகளுக்கு அருகே பார்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பார்களில் ஒரு வசதியும் இல்லை. இதனால் ‘குடிமக்கள்‘ மிகுந்த‘சிரமப்பட்டு‘ சந்து பொந்துக்குள் நின்றும், கடை முன் நின்றும் கடக் என ஒரே மூச்சில் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
![]() |
குடிமக்களின் ‘கண்ணீர் புலம்பல்‘ அரசின் காதுகளை எட்டியதும், உடனடியாக பார்களை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த பார்களில்பெஞ்சும், சேரும் உண்டு என்றாலும் குடிமக்கள் எதிர்பார்க்கும் இன்ன பிற வசதிகள் இல்லை.
இந் நிலையில் இப்போது பார்களை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பார்கள் படு நவீனமாக மாறப் போகின்றன. பார்கள் முழுவதும் குளிர்சான வசதியுடன் கூடியதாக மாறுகின்றன. வசதியாக அமர்ந்து கொள்ளகுஷன் சோபா இருக்கை, கண்ணாடி பொருத்தப்பட்ட டேபிள், கஸ்டமர்களுக்கு சரக்கு சப்ளை செய்வோர் அணிய கண்கவர் சீருடை,கம்ப்யூட்டரைஸ்டு பில் என அட்டகாசமாக மாறப் போகின்றன அரசு பார்கள்.
ஒவ்வொரு பாரும் ரூ. 3 லட்சம் செலவில் மாற்றப்படுகிறது. இந்த பார்களில் 25 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து குடிக்கும் வகையில் இருக்கைகள்போடப்பட்டிருக்கும். கை கழுவ (ரொம்பக் குடித்து வாந்தி எடுப்போர், வாயையும் கழுவிக் கொள்ளலாம்!) வாஷ் பேசினும் அமைக்கப்படுகிறது.
ஏ.சி வசதி கொண்ட பாருக்குச் சென்று குடிக்க ஒவ்வொரு குடிமகனும் ரூ. 10 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டுமாம். மற்றபடி சரக்குக்குகூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
மார்ச் 10ம் தேதிக்குள் இந்த மாற்றங்களை ஏற்படுத்தி விட உத்தரவிடப்பட்டு உள்ளதால், நவீன பார்களை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்துவருகிறது. சில கடைகளில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துவிட்டது.
தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 300 பார்கள் இப்படி அதி நவீனமாக அமைக்கப்படவுள்ளன. அதைத் தொடர்ந்து பார்களின்எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இதுதவிரமாவட்டந்தோறும் மேலாளர் அலுவலகங்களும் உள்ளன. மொத்தம் 41 டிப்போக்கள் உள்ளன.
இந்த டிப்போக்களிலிருந்து மாநிலம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 697 மதுக் கடைகளுக்கு விதம் விதமான மது வகைகள்விநியோகிக்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் 3 ஆயிரத்து 264 கடைகளும், புறநகர்ப் பகுதிகளில் 3 ஆயிரத்து 433 கடைகளும் உள்ளன.
மொத்தம் 6 ஆயிரத்து 652 மேற்பார்வையாளர்கள், 17 ஆயிரத்து 326 ஊழியர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.
நகர்ப்புறங்களில் உள்ள மதுக் கடைகளில் 2 ஆயிரத்து 963 கடைகளிலும், புறநகர்களில் உள்ள 2 ஆயிரத்து 223 கடைகளிலும் அட்டாச்டு பார்கள்உள்ளன.
‘பாரு‘க்குள்ளே நல்ல ‘பாரு‘ நம்ம டாஸ்மாக் ‘பாரு‘!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications