பட்ஜெட் புண்ணியத்தால் கார்கள் விலை விர்ர்ர்!
டெல்லி:மத்திய பட்ஜெட்டில், கல்வி நிதிக்கான துணை வரி 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கார்களின் விலைகணிசமாக உயருகிறது.
மத்திய பட்ஜெட்டில் பல சலுகைகளை பல தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. மாறாக, நாய், பூனைகளுக்கானஇறக்குமதி உணவுக்கு வரியைக் குறைத்து எதிர்க்கட்சிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் ப.சிதம்பரம்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, கல்வி நிதிக்கான துணை வரி (சர் சார்ஜ்) 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எல்லாவகையான வரி மீதும் இந்த 3 சதவீத எக்ஸ்ட்ரா வரி விதிக்கப்படும்.
இதனால் பல பொருட்களின் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கார்களின் விலை கணிசமாக உயருகிறது. முதல் ஆளாக மத்திய அரசின் மாருதி நிறுவனம்தான் கார் விலையை உயர்த்துகிறது.
பட்ஜெட்டில் கார்களுக்கான உற்பத்தி வரி குறையும் என கார் நிறுவனங்கள் எதிர்பார்த்தன. ஆனால் அப்படிக் குறைக்கப்படவில்லை. மேலும்இரும்பு, அலுமினியம் ஆகிய மூலப் பொருட்களின் விலை உயர்ந்ததுள்ளதாலும், கல்வி நிதிக்கான சர்சார்ஜ் உயர்த்தப்பட்டதாலும் வேறுவழியின்றி கார் விலையை தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
மார்ச் 15ம் தேதி முதல் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்தப் போவதாக மாருதி அறிவித்துள்ளது. குறைந்தது ரூ. 1,000 முதல் ரூ 12,000வரை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து மாருதி உத்யோக் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கத்தார் கூறுகையில், மூலப்பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளதால்வாடிக்கையாளர்களும் இந்த சுமையை பகிர்ந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
மாருதியைத் தொடர்ந்து, ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களும் தங்களின் கார்களின் விலையை உயர்த்தும் எனஎதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு 1% முதல் 1.5% வரை இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
உ.பி. மாநிலம் நொய்டாவில் கார் ஆலைக்கு மத்திய விற்பனை வரி விலக்கு 2 வாரங்களில் முடிவடையும் நிலையில் அதற்கு வரி கட்ட வேண்டிஇருப்பதால் அந்த சுமையும் வாடிக்கையாளர்கள் தலையில்தான் விழப்போகிறது.
இதனால் டாடா நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்தும், ஹோண்டா சீயல் நிறுவனம் ரூ.10,000 முதல் ரூ,12,000 வரை கார் விலையைஉயர்த்துவதாக அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications