சிலிண்டரை சுமந்தபடி ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம்!
சென்னை:கேஸ் சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்தியும், இரு கேஸ் இணைப்புகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு கிடையாதுஎன்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கார்டு வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தமிழகம்முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மீனவர் அணிச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். காலி சிலிண்டர் ஒன்றை தலையில்தூக்கிச் சுமந்தபடி ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம் செய்தார். அதேபோல மேலும் சில அதிமுகவினரும் சிலிண்டரை சுமந்து கொண்டு கோஷமிட்டனர்.
மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications