முலாயம் ரூ. 500 கோடி சொத்து குவிப்பு?
டெல்லி:உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் ரூ. 500 கோடி அளவுக்கு சொத்துகுவித்துள்ளதாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. காங்கிரஸ், பாக எம்பிக்கள் முலாயம் ராஜினாமா செய்யவேண்டும் என கோஷமிட்டனர். பதிலுக்கு முலாயமின் சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் கோஷமிட்டதால் இருஅவைகளிலும் பெரும் அமளி நிலவியது. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
சமூக சேவகர் விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில்முலாயமின் சொத்து குவிப்பு குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி லட்சுமணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள், இன்னொரு மகன் பிரதீக்யாதவ் ஆகியோர் மீதான புகார்களைப் பரிசீலித்து, அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யமுடியுமா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர், அதிலும் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வராகஇருப்பவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுஎழுந்திருப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு முரணானது.
எனவே இந்த விஷயத்தை சிபிஐ விசாரணைக்கு விடும் நிலைமை உருவாகியுள்ளதாக நீதிபதிகள்தெரிவித்துள்ளனர்.
உ.பி. மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முலாயம் மீதான இந்த விசாரணை,சமாஜ்வாடிக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது.
மாஜி முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர் முலாயம் சிங் என்பது குறிப்பிடதக்கது. முலாயமின்வலது கரமான அமர்சிங் நாட்டின் மிகப் பெரிய அரசியல்-தொழில்துறை புரோக்கர் என்று குற்றம்சாட்டப்படுபவராவார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications